சென்ற ஆண்டு ஜூலையில்
"ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்" னு
ஜூலை 3 2022 அன்று
ஆனால் இன்றுவரை அவர்களில் எவரும் துளி கூட முதல்வரின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை
அப்படின்னு நான் சொல்லவில்லை, அதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் சொல்லி இருக்கிறார்.
அக்டோபர்,9 2022 அன்று திமுக பொதுக்குழு கூட்டத்தில்
"என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?.
நாள்தோறும் காலையில் 'நம்மவர்கள்' யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன். சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது, என்னை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்"
என்று வருத்தத்துடன் பேசினார்.
ஆனால் அதற்கு பிறகேனும் அவர்கள் திருந்திவிட்டார்களா என்றால்,
'திமுக நிர்வாகிகளின் அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல்கள் குறித்து தினசரிகளில் தவறாமல் இடம்பெறும் செய்திகள்' எல்லாம், இன்னும் அவர்கள் திருந்தவில்லை என்று தான் தெரிகிறது.
நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது,
'பத்தாண்டுகளுக்கு முன்பு அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடான வழியில் ஆதாயம் அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததற்காக
"எங்களுக்கும் 'எல்லாம்' தெரியும், திமுக வரலாறுபற்றி தெரிஞ்சிக்கனும்னா டெல்லியில் இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களை கேட்டு பாருங்க.
எங்களை சீண்டிப் பார்க்காதீங்க. தி.மு.க.வையோ, தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள்.
எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை."
என்று பாஜகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது எந்தவிதத்தில் நியாயம் என்று அவர் தான் விளக்கம் தரவேண்டும்.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தமிழக முதல்வர் கண்டிப்பாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், அது
'சமகாலத்தில் உருவான பாஜக எப்படி இந்த தேசத்தையே ஆளும் அளவிற்கு வளர்ந்தது?
பாஜகவின் ஆதர்ஷ தலைவர்கள் எத்தகைய அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியவர்கள்,
எத்தனை எத்தனை கொள்கைரீதியான, சித்தாந்தரீதியான எதிரிகளை வீழ்த்தி இருக்கிறார்கள்,
வன்முறை தலைவிரித்தாடிய காஷ்மீரிலும், அசாமிலும், உபியிலும், பீகாரிலும், திரிபுராவிலும், நாகலாந்திலும் எப்படி கால்பதித்து, ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்கள் என்றும்
வன்முறை பேயாட்டம் ஆடும் மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் எப்படி வளர்ந்து வருகிறார்கள் என்றும்,
சவடால்களால் அம்பு மழை பொழியும்,
வாய் வீச்சுகளால் வானத்தையும் பிளக்கும்
அளந்து விடும் அடுக்குமொழி பேச்சுகளால்
பெரியார் மண் என்ற திராவிட மாயையை வளர்த்து திராவிட சக்திகள் வெற்றியை ஈட்டி வரும் தமிழகத்தில்,
பாஜக தலைநிமிர்ந்து வானளாவ வளர்ந்து நிற்பது எதனால்?
எப்படி?
எங்கனம்?
எவ்வாறு?
என்றெல்லாம் ... என்றெல்லாம்
டெல்லியில் நீண்ண்ண்ட காலமாக ஆணவத்துடன் கோலோச்சி வந்த,
பாஜகவின் போராட்ட அரசியலால் வீழ்த்தப்பட்டு,
விதியினை நொந்தபடி
இன்னமும் டெல்லியில் வலம் வந்து கொண்டிருக்கும்
தற்போதைய எதிர்கட்சி தலைவர்களை, அதாவது மூத்த தலைவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்,
இல்லை இல்லை
பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது சான்றோரின் வாக்கு.
தமிழகத்தை இஞ்ச், இஞ்ச்சாக அலசி ஆராய்ந்து, பாடம் படித்து,
களத்தில் இறங்கி இருப்பது வாஜ்பாயின் பாஜக தான்,
ஆனால் அதை வழிநடத்துவது நரேந்திர தாமோதர தாஸ் மோடி எனும் நவீன
'பரந்து விரிந்த பாரத பேரரசின் மகா சக்கரவர்த்தி'.
இது
அமித்ஷா, அஜீத் தோவல், ராஜ்நாத் சிங், யோகி, மனோகர் லால் கட்டார், ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, கபில் மிஸ்ரா, தேவேந்திர பட்நாவிஸ், பிப்லப் தேவ், சுவந்து அதிகாரி, தேஜஸ்வி சூர்யா, அண்ணாமலை போன்ற நிஜ தளபதிகள் களமாடும் மோடி ராஜ்யம்.
இங்கு யாரினுடைய
மிரட்டலோ அல்லது எச்சரிக்கையோ
எதுவும்
எல்லை மீறாதவரை 'எல்லோருக்கும்' நல்லது.
No comments:
Post a Comment