லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் செல்வ வளம் மட்டுமல்லாது பதினாறு பேறுகளை பெறலாம். இந்த உலகத்தில் லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினாள் என்றால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும்.
எப்போதும் உண்மையே பேசுபவர்கள், சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் பொது நலத்தோடு இருப்பவர்களிடம் அன்னை லட்சுமி வசிப்பாள். இதனை பகவான் கிருஷ்ணர் தனது தோழன் அர்ஜுனனுக்கு ஒரு முதியவரின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் நடந்து போய் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான்.
முதியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!'' என்று நினைத்தவாறே வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.
சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.
முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார். இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது. அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.
சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.
அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.
செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.
யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.
இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல்.
சந்தோஷ மிகுதியால் 'சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார். அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன் ஆசிரியர் தினம் 2019: ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு கிடைக்கும் - குரு அருள் இருக்கா திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.
அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்.
கண்ணன் சிரித்துக்கொண்டே... ''இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார்.
இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.
அதனால்தான் சொல்கிறேன் பொது நலமுள்ளவர்களுக்கே லட்சுமி கடாட்சம் கிடைக்கும்,'' என்று கிருஷ்ணன் கூற ஆமோதித்தார்.
ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்
வ எண் சமஸ்கிருதம் தமிழ்
1. ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் இயற்கையே போற்றி!
2. விக்ருத்யை ஓம் பலவடிவானவளே போற்றி!
3. வித்யாயை ஓம் கல்வியே போற்றி!
4. ஸர்வபூத-ஹிதப்ரதாயை ஓம் அனைத்துயிர்க்கும் அருள்பவளே போற்றி!
5. ச்ரத்தாயை ஓம் இசைக்கப்படுபவளே போற்றி!
6. விபூத்யை ஓம் செல்வமே போற்றி!
7. ஸுரப்யை ஓம் விண்ணவளே போற்றி!
8. பரமாத்மிகாயை ஓம் உள்ளுறைபவளே போற்றி!
9. வாசே ஓம் சொல்லே போற்றி!
10. பத்மாலயாயை ஓம் தாமரைக் கோவிலே போற்றி!
11. பத்மாயை ஓம் தாமரையே போற்றி!
12. சுசயே ஓம் தூய்மையே போற்றி!
13. ஸ்வாஹாயை ஓம் மங்கலமே போற்றி!
14. ஸ்வதாயை ஓம் அமங்கலத்தைத் தீர்ப்பவளே போற்றி!
15. ஸுதாயை ஓம் அமுத ஊற்றே போற்றி!
16. தன்யாயை ஓம் நன்றியே போற்றி!
17. ஹிரண்மய்யை ஓம் பொன்வடிவானவளே போற்றி!
18. லக்ஷ்ம்யை ஓம் இலக்குமியே போற்றி!
19. நித்யபுஷ்டாயை ஓம் என்றும் வலிமை அருள்பவளே போற்றி!
20. விபாவர்யை ஓம் ஒளியே போற்றி!
21. அதித்யை ஓம் அளவில்லாதவளே போற்றி!
22. தித்யை ஓம் வேண்டுதல் அருள்பவளே போற்றி!
23. தீப்தாயை ஓம் கனலே போற்றி!
24. வஸுதாயை ஓம் உலகமே போற்றி!
25. வஸுதாரிண்யை ஓம் உலகைக் காப்பவளே போற்றி!
26. கமலாயை ஓம் தாமரையே போற்றி!
27. காந்தாயை ஓம் கவர்பவளே போற்றி!
28. காமாக்ஷ்யை ஓம் காதற்கண்ணியே போற்றி!
29. க்ஷீரோதஸம்பவாயை ஓம் பாற்கடலில் உதித்தவளே போற்றி!
30. அனுக்ரஹ ப்ரதாயை ஓம் அருளை அள்ளித் தருபவளே போற்றி!
31. புத்தயே ஓம் அறிவே போற்றி!
32. அநகாயை ஓம் குற்றமில்லாதவளே போற்றி!
33. ஹரிவல்லபாயை ஓம் விண்ணவன் துணைவியே போற்றி!
34. அசோகாயை ஓம் சோகமற்றவளே போற்றி!
35. அம்ருதாயை ஓம் அழிவற்றவளே போற்றி!
36. தீப்தாயை ஓம் சுடரே போற்றி!
37. லோகசோக-விநாசின்யை ஓம் உலகக் கவலைகள் தீர்ப்பவளே போற்றி!
38. தர்மநிலயாயை ஓம் அறத்தில் நிலைத்தவளே போற்றி!
39. கருணாயை ஓம் அருளே போற்றி!
40. லோகமாத்ரே ஓம் உலக அன்னையே போற்றி!
41. பத்மப்ரியாயை ஓம் தாமரையை விரும்புபவளே போற்றி!
42. பத்மஹஸ்தாயை ஓம் தாமரை ஏந்தியவளே போற்றி!
43. பத்மாக்ஷ்யை ஓம் தாமரைக்கண்ணியே போற்றி!
44. பத்மஸுந்தர்யை ஓம் தாமரை அழகியே போற்றி!
45. பத்மோத்பவாயை ஓம் தாமரையில் தோன்றுபவளே போற்றி!
46. பத்மமுக்யை ஓம் தாமரை முகத்தவளே போற்றி!
47. பத்மநாபப்ரியாயை ஓம் பத்மநாபன் துணைவியே போற்றி!
48. ரமாயை ஓம் மகிழ்ச்சியே போற்றி!
49. பத்மமாலாதராயை ஓம் தாமரை மாலை அணிந்தவளே போற்றி!
50. தேவ்யை ஓம் தேவியே போற்றி!
51. பத்மின்யை ஓம் தாமரைத் திருவே போற்றி!
52. பத்மகந்தின்யை ஓம் தாமரை மணமே போற்றி!
53. புண்யகந்தாயை ஓம் புனித மணமே போற்றி!
54. ஸுப்ரஸன்னாயை ஓம் எளிதில் மகிழ்பவளே போற்றி!
55. ப்ரஸாதாபிமுக்யை ஓம் அருள்வதில் மகிழ்பவளே போற்றி!
56. ப்ரபாயை ஓம் ஒளிவட்டமே போற்றி!
57. சந்த்ரவதனாயை ஓம் மதி முகமே போற்றி!
58. சந்த்ராயை ஓம் மதியே போற்றி!
59. சந்த்ரஸஹோதர்யை ஓம் மதியின் உடன்பிறப்பே போற்றி!
60. சதுர்ப்புஜாயை ஓம் நான்கு கரத்தாளே போற்றி!
61. சந்த்ரரூபாயை ஓம் மதிவடிவானவளே போற்றி!
62. இந்திராயை ஓம் நீலத்தாமரையே போற்றி!
63. இந்து-சீதலாயை ஓம் மதியின் குளிர்ச்சியே போற்றி!
64. ஆஹ்லாத ஜனன்யை ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!
65. புஷ்ட்யை ஓம் உடல் நலமே போற்றி!
66. சிவாயை ஓம் மங்கலமே போற்றி!
67. சிவகர்யை ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி!
68. ஸத்யை ஓம் உண்மையே போற்றி!
69. விமலாயை ஓம் குறையில்லாதவளே போற்றி!
70. விச்வ ஜனன்யை ஓம் அனைத்திற்கும் அன்னையே போற்றி!
71. துஷ்ட்யை ஓம் நல வடிவே போற்றி!
72. தாரித்ர்ய-நாசின்யை ஓம் வறுமையைப் போக்குபவளே போற்றி!
73. ப்ரீதிபுஷ்கரிண்யை ஓம் உயிர் காக்கும் நீர் நிலையே போற்றி!
74. சாந்தாயை ஓம் அமைதியே போற்றி!
75. சுக்லமால்யாம்பராயை ஓம் வெண்ணிற மாலையும் ஆடையும் உடுத்தியவளே போற்றி!
76. ச்ரியை ஓம் அதிர்ஷ்டம் தருபவளே போற்றி!
77. பாஸ்கர்யை ஓம் ஒளியைத் தருபவளே போற்றி!
78. பில்வநிலயாயை ஓம் வில்வத்தில் உறைபவளே போற்றி!
79. வராரோஹாயை ஓம் வரங்களை அருள்பவளே போற்றி!
80. யசஸ்வின்யை ஓம் புகழே போற்றி!
81. வஸுந்த்ராயை ஓம் இயற்கைச் செல்வங்களைத் தாங்குபவளே போற்றி!
82. உதாராங்காயை ஓம் ஒப்பற்ற அழகே போற்றி!
83. ஹரிண்யை ஓம் மான் ஒத்தவளே போற்றி!
84. ஹேமமாலின்யை ஓம் பொன்னணியாளே போற்றி!
85. தனதான்யகர்யை ஓம் பொன்னையும் உணவையும் தருபவளே போற்றி!
86. ஸித்தயே ஓம் பயனே போற்றி!
87. ஸ்த்ரைணஸெளம்யாயை ஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி!
88. சுபப்ரதாயை ஓம் சுபம் அருள்பவளே போற்றி!
89. ந்ருபமேச்மகதானந்தாயை ஓம் அரண்மனைகளில் நிலைத்தவளே போற்றி!
90. வரலக்ஷ்ம்யை ஓம் வரலட்சுமியே போற்றி!
91. வஸுப்ரதாயை ஓம் செல்வங்கள் தருபவளே போற்றி!
92. சுபாயை ஓம் சுபமே போற்றி!
93. ஹிரண்யப்ராகாராயை ஓம் பொன்னால் சூழப்பட்டவளே போற்றி!
94. ஸமுத்ரதனயாயை ஓம் அலைமகளே போற்றி!
95. ஜயாயை ஓம் வெற்றியே போற்றி!
96. மங்கள தேவ்யை ஓம் மங்களதேவியே போற்றி!
97. விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை ஓம் மாலவன் மார்பில் நிலைத்தவளே போற்றி!
98. விஷ்ணுபத்ன்யை ஓம் மாதவன் துணையே போற்றி!
99. ப்ரஸன்னாக்ஷ்யை ஓம் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடையவளே போற்றி!
100. நாராயணஸமாச்ரிதாயை ஓம் நாரணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி!
101. தாரித்ர்யத்வம்ஸின்யை ஓம் வறுமையை துவைப்பவளே போற்றி!
102. தேவ்யை ஓம் தேவியே போற்றி!
103. ஸர்வோபத்ரவவாரிண்யை ஓம் அனைத்து இடைஞ்சல்களையும் நீக்குபவளே போற்றி!
104. நவதுர்க்காயை ஓம் நவதுர்க்கையே போற்றி!
105. மஹாகாள்யை ஓம் மகாகாளியே போற்றி!
106. ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மிகாயை ஓம் பிரமன் விண்ணவன் சிவன் வடிவானவளே போற்றி!
107. த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை ஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி!
108. புவனேச்வர்யை ஓம் உலகை ஆளும் அன்னையே போற்றி!
ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment