Tuesday, June 20, 2023

2024 நாடாளுமன்றத் தேர்தல்.

 

பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் ஒரே கூட்டணியில் இருந்தால், பா.ஜ.க. ஆதரவாளர்களில் 75% பேர் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். அதற்கு மாறாக, அ.தி.மு.க. ஆதரவாளர்களில் 15% பேர் தான் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். ஆகையினால், இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை 'Transfer of Votes' நியாயமாக நடைபெறுவதில்லை. 'Inequitable & Unfair Transfer' தான் நடைபெறுகிறது. இதைக் கடந்த காலத்தில் பல தடவை பார்த்து விட்டோம்.

தமிழ்நாட்டில், பா.ஜ.க. தலைமையிலான வலுவான கூட்டணி அமைந்தால், அவர்களுக்கு 3 முதல் 5 இடங்கள் கிடைக்கலாம். பா.ஜ.கவுக்கு மட்டும் என்று பார்த்தால், 1 அல்லது 2 இடங்களே கிட்டும். ஆகவே, தமிழ்நாடு மாநிலம் பா.ஜ.கவுக்கு ஒரு பொருட்டே இல்லை. தமிழ்நாட்டில் ஜெயித்துத் தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இல்லை.

எனவே, தோற்றாலும் பரவாயில்லை என்று பா.ஜ.க. துணிந்து தனியாகக் களத்தில் இறங்குவதே நல்லது. அதற்கு மாற்றாக, பா.ஜ.க. தலைமையில் பல சிறு கட்சிகள் மற்றும் குழுக்கள்/இயக்கங்களோடு களம் காண்பதே நன்று.

சட்டமன்றத் தேர்தலின் நிலைமை வேறு. ஆகவே, பா.ஜ.க. என்னைப் போன்ற ஆயிரக் கணக்கோர் எதிர்பார்க்கிற படி செய்வார்களா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...