மக்கள் திலகத்தை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட ராதாவையும் காப்பாற்றி உயிர் கொடுக்கச்செய்தவர் எம்ஜிஆர்.
திமுக முதன்முதலில் அரியணை ஏறியதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர். அதன்மூலம் முதலில் பொதுப்பணி அமைச்சர், அடுத்து அண்ணாவின் மறைவிற்குப் பின் கருணாநிதியை முதல்வர் ஆக்கியதும் எம்.ஜி.ஆர்.
எம்.ஆர்.ராதாவை முன்கூட்டியே விடுவித்து பொதுக்கூட்டங்களில் மீண்டும் எம்ஜிஆருக்கு எதிராக பேச வைத்தார். தன் மகன் நடித்த சமையல்காரன், தனது சொந்தப்படமான ஜெய்சங்கர் நடித்த வண்டிக்காரன் மகன் போன்ற படங்களில் ராதாவை நடிக்க வைத்து எம்ஜிஆருக்கு எதிராக சில வசனங்களையும் பேச வைத்தார்.
ஆனால், மக்கள் திலகம் ராதாவிற்கு எதிராக என்றும் பேசியதில்லை. தான் ஆட்சிக்கு வந்த போதும் ராதாவிற்கு எந்த துன்பமும் கொடுத்ததில்லை. ஒரே விமானத்தில் #ராதாரவி வந்திருப்பதை அறிந்து அவருடன் சகஜமாக பேசி பின் கோவை விமான நிலையத்தில் தான் இறங்குவதற்கு முன் அதிகாரிகளிடம் பத்திரமாக ராதாரவியை அனுப்பி வைக்கச் சொன்னவர் மக்கள் திலகம்..
அதே போல் ஒரு தயாரிப்பாளரால் #ராதிகாவிற்கு
பொருளாதார ரீதியாக பிரச்சனை ஏற்பட்ட போது தோட்டத்திற்கு வந்து மக்கள் திலகத்திடம் முறையிட்டார். மறுநாளே அவரது பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தவர் மக்கள் திலகம்..
யாரையும் வாழ வைத்து பார்ப்பவரே மக்கள் திலகம். பிறரது அழிவை நினைத்து சந்தோஷப்படும் ஆத்மா அவரல்ல. இது அவரால் பாதிக்கப் பட்டதாக அவ்வப்போது வதந்திகளாக உலாவரும் நடிகர்கள் விஷயத்திற்கும் பொருந்தும்..
No comments:
Post a Comment