இயக்குனர் வரிசையில் இவரை சொன்னாலும் கூட சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பட்டம் இவருக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்
பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து வெற்றிக்கொடி நாட்டியவர்களில் முதன்மையானவர்
அதற்கு முன்பு பதினாறு வயதினிலே , சிகப்பு ரோஜாக்கள் ஆகய படங்களில் சிறய வேடத்தில் தலை காட்டிஇருப்பார்
ஒரு கதையை அழகுற சொல்லி ரசிகர்களை கட்டி போட்டவர் . நகைச்சுவையாக கதை சொன்னாலும் கூட அதில் ஆழம் இருந்தது உதாரணம் சுவர் இல்லா சித்திரங்கள் வறுமை ஒரு குடும்பத்தை சின்னா பின்னமாக்குவதை நகைச்சுவை தோய்த்து சொல்லி இறுதியில் கண்கலங்க வைப்பார்
மேலும் ஒரு முக்கிய அம்சம் கதாநாயகன் என்பவன் அசுர சாதனைகள் செய்பவன் எங்கெல்லாம் தப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் தோன்றுவான் என்ற எம்ஜியார் காலத்து நடைமுறையை பெரிதும் உடைத்தவர் ஒரு பலவீனனை சுற்றியும் கதை பண்ண முடியும் என்பதை பல படங்களில் நிருபித்தவர்
ஒரு கை ஓசை , அந்த ஏழு நாட்கள் , மௌன கீதங்கள் ,டார்லிங் டார்லிங் ,தூறல் நின்னு போச்சு , முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் , சின்ன வீடு வீட்டில விசேஷம் , ஒரு ஊரில் ஒரு ராஜ குமாரி ,போன்ற பல படங்கள் இவரது திரைக்கதைக்காகவும் , கிளைமாக்ஸ் ஆகவும் பெயர் பெற்ற படங்கள்
இவரின் அறிமுகம் ஊர்வசி மிக சிறந்த குணசித்திர நடிகையாகவும் , நகைச்சுவை நடிகையாகவும் பிரகாசித்தார்
இவருக்கு பின் வந்த இணை இயக்குனர் வரிசை மிக பெரியது அனைவரும் பெயர் சொல்லும் இடத்தை பிடித்தனர் காரணம் கதை சொல்லும் பாங்கை இவரிடம் கற்று கொண்டதுதான்
கதையமைப்பு, உச்சகட்ட காட்சி அமைப்பில் சிறந்த படைப்புகளை தந்துள்ளார் இவரது நாயகர்கள் அப்பாவியாக படம் முழுவதும் வந்தாலும் கூட கிளைமாக்ஸ் காட்சியில் அவன் பெண்கள் மனதை கொள்ளை கொள்ளும் வண்ணம் நல்ல பையனாக நடந்து கொள்வது பொதுவான கதை புனைவாக இருக்கும்
மேலும் யூகிக்க முடியாத உச்சகட்ட காட்சியை அமைப்பதில் சிறந்தவர் முடிந்தவரை ஹீரோயிசம் காட்டாமல் அவனை மனதில் நிலை நிறுத்துவதில் நன்கு ஸ்கோர் செய்வார்
ஒரு கைதியின் டைரி( பாரதி ராஜா )யின் இந்தி பதிப்பான ஆக்ரி ரஸ்தா இவr இயக்கியதுதான் அதன் வெற்றி இந்தி திரையரங்கில் பெரிதாக பேசப்பட்டது
தாவணி கனவுகளில் சிவாஜியை வைத்து இயக்கிஇருப்பார் . அவர் புகழுக்கும் சேதாரம் இல்லாமல் தன்னையும் நிலை நிறுத்தி கொள்வார்
அன்புள்ள ரஜினிகாந்தில் ரஜினியுடன் இவர் வரும் கட்சிகள் படத்தின் ஹை லைட்டாக இருக்கும்
எம்ஜியார் பாதி எடுத்து முடித்து இருந்த அண்ணா நீ என் தெய்வம் படத்தை மீண்டும் சரி செய்து அவசர போலீஸ் என்று பெயர் மாற்றி அதையும் வெற்றி பெற செய்தார் .
நான் சிகப்பு மனிதன் , விதி போன்றவற்றிலும் தோன்றி தனக்கான முத்திரையை பதித்து இருப்பார் .
இவரது தோல்வி படங்களான அம்மா வந்தாச்சு( இயக்கம் பி வாசு ), வேட்டி மடிச்சு கட்டு ஆகியவைகள் இந்த கட்டமைப்போடு இல்லதனாலேயே தோல்வி அடைந்தது இது போல் சறுக்கல்கள் அவ்வபோது ஏற்பட்டாலும் படத்தை சுவாரஸ்யமாக பார்க்க வைப்பதில் வித்தகர்
பல காலம் கழித்து வந்த சொக்கதங்கம் , பாரிஜாதம் படங்களில் இவரது பங்களிப்பு சிறப்பாகவே இருந்தது
மற்றபடி அவர் தன் திறமைகளில் வேறு எதையும் வலுப்படுத்திகொள்ளவில்லை நடிப்பு சுமார் ரகம் (நகைச்சுவை மட்டுமே எடுபடும் ) இவருடைய நடனம் தற்சமயம் டிவி ஷோக்களில் அதிகம் விமர்சிக்கப்படுபவை அது பெரிய குற்றமில்லை எல்லோரும் சகலகலா வ்ல்லவர்களாக இருக்க முடியாது இருக்கவும் தேவையில்லை
அவரின் பலம் கதை அதில் மட்டும் கவனம் செலுத்தினால் நிச்சயம் இன்னும் கூட பிரகாசிக்கலாம்
பெட்டெர் லக் பாக்யராஜ்.
No comments:
Post a Comment