Monday, November 20, 2023

1963 -ஆம்ஆண்டு, இடம்:- ஆலப்புழை, கேரள மாநிலம் படகோட்டி - திரைப்படம் படப்பிடிப்பு.

 புரட்சித்தலைவரின் மெய்காப்பாளர் கடந்த 2016 என்னிடம் சொன்னது:-

"கேரள மாநிலம் புறக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்த 13 வது நாள் இந்த பாடல் காட்சி நிறைவுபெற்றது..
மாலை நான்கு மணி இருக்கும். ஒரு தம்பதியனர் கூட்டத்தில் முட்டி மோதி அழுதபடி தலைவரிடம் நெருங்கினர்.
என்ன வேண்டும்? எதற்கு அழுகிறீர்கள்? - தலைவர்.
"ஐயா !! நாங்கள் ஐந்து வருஷமாக கூலி வேலை செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்த பணம் 10,000 ரூபாய்ஒருநாள் எங்கள் உறவினரிடம் கொடுத்துவைக்க சென்றோம் நாங்கள் திரிசசூர் தாண்டி குறுக்குவழியில் வந்த மாலை நேரம் இருட்டு. வழிப்பறி திருடர்கள் எங்களிடம் இருந்த பணத்தை கத்தியை காட்டி திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். எங்கள் மகள் கல்யாணம் நின்றுபோய் உள்ளது. எங்களுக்கு உதவுவீர்களா? " - என்று அழுதனர்.
தலைவரிடம் உதவி கேட்டாலே அதே இடத்தில உதவுவார். அவரிடமே பணம் கடனை திருப்பி தருகிறோம் என்று சொன்னபோது தலைவருக்கு அவர்களின் நேர்மை, பரிதாபம் உணர்ந்தார்.
என்னிடம் (ராமகிருஷ்ணன்) " ராமு, இவர்கள் இருவரையும் சென்னைக்கு தோட்டத்திற்கு அழைத்து வா" என்று ரயில் செலவுக்கு பணம் அங்கே கொடுத்தார்.
மறுநாள் அவர்களை ராமாவரம் தோட்டம் அழைத்து வந்தேன். அந்த வீடு கட்டிய அதே வருடம்....
காலை, மதியம் உணவு சாப்பிடவைத்தார் இருவரையும்.
மாலை அழைத்தார்..
என்னிடம், " ராமு,,, மேல போயிட்டு ஜானு கிட்ட (வி என் ஜானகி) பணம் வாங்கிட்டு வா" என்று என்னிடம் 2 விரலை காட்டினார்,
மேலே சென்று ஜானகி அம்மாவிடம் பணம் வாங்கிகொண்டு அவரையும் அழைத்துவந்தேன்.
கையில் இருந்த பணத்தை கேரளா தம்பதியிடம் கொடுத்தார். அங்கே எண்ணி பார்த்தார்கள்.
பணம் 20,000 ருபாய் இருந்தது..
"ஐய்யா நாங்கள் கேட்டது 10,000 ..நீங்கள் 20,000 கொடுக்கிறீர்களே? என்று சொன்னார்கள்.
அதற்க்கு தலைவர், " நீங்கள் உங்கள் மகள் கல்யாணத்தை கவனியுங்கள். தொகை போதுமா, இன்னும் வேணுமா?' என்றார்.
தம்பதியினர் அழுது தலைவர் காலில் விழுந்தார்கள்.
பின்னர் என்னிடம் (ராமு) "இவர்களை பத்திரமாக ரயில் நிலையம் சென்று வழி அனுப்பி விட்டு வாருங்கள்" என்றார். அதேபோல அனுப்பிவிட்டு வந்தபின்புதான் தலைவர் சாப்பிட்டார். அப்போது மணி இரவு 10 க்குமேலே,,
இது நடந்தது 1963 ஆம் வருடம்..
...
அந்த காலகட்டத்தில் 20,000 ரூபாயின் மதிப்பு இன்று எவ்வளவு என்று கணக்கிட்டு கொள்ளுங்கள்"
தம்பி தலைவரை பற்றிய நினைவுகள் வருடம் பூராவும் பேசலாம்..
இதுதான் மூன்றெழுத்து எம் ஜி ஆர்" என்று கண் கலங்கினார் பெரியவர் திரு ராம கிருஷ்ணன்
"கொடுத்ததெல்லாம் கொடுத்தார்..- அவர்
யாருக்காக கொடுத்தார்,,..
ஒருத்தருக்கா கொடுத்தார் - இல்லை
ஊருக்காக கொடுத்தார்" -
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?"
என்ற கவிஞர் வாலியின் பாடல்களை மெய்யாக்கிய மனிதர் எங்கள் பொன்மனசெம்மல் என்றேன்.
--- இன்னும் சொல்வேன்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...