Saturday, November 18, 2023

தவறவிட்ட_கேட்சுகள் ..

 

♦ஏய்டன் மார்க்ரம் 45வது ஓவரை வீசினார்.
♦ஆஸ்திரேலியா வெற்றிக்கான ரன்களை தேடிக் கொண்டிருந்தது.
♦ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வலுவான பேட்டர்கள் இல்லை.
♦களத்தில் நின்றது கேப்டன் பேட் கம்மின்ஸும் மிட்செல் ஸ்டார்க்கும்.
♦இருவருமே தடுப்பாட்டம் ஆடி ஒவ்வொரு ரன்னாய் சேர்த்துக் கொண்டிருந்தனர்.
♦மார்க்ரம் வீசிய 2வது பந்து அது. பேட் கம்மின்ஸ் பேட்டின் நுனியில் பட்டு ..
♦ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் டி காக் வசம் சென்றது.
♦ஆனால் அதை டி காக்கால் பிடிக்க முடியவில்லை.
♦ஆட்டத்தையே தலைகீழாக மாற்றும் வல்லமை அந்த கேட்சுக்கு இருந்தது.
♦அதிர்ஷடம் தென்னாபிரிக்கா பக்கம் இல்லை என வர்ணணையாளர்கள் வர்ணித்தனர்.
♦ஏய்டன் மார்க்ரம் முகத்தில் சோகம் நிறைந்திருந்தது.
♦கேப்டன் டெம்பா பவுமா நொந்து கொண்டார்.
♦ஒரேயொரு கேட்ச், ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும்.
♦அதைப் பயன்படுத்தி தென்னாப்ரிக்கா தனது காயங்களுக்கு மருந்தளித்திருக்கும்.
♦ஆனால், அது நடக்கவில்லை.
♦தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவு கானல் நீராகிப் போனது.
♦விக்கெட்டை விடாமல் போராடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸே,
♦இறுதியில் வின்னிங் ஷாட் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
♦அரையிறுதியுடன் வெளியேறும் சோகம் ஐந்தாவது முறையாக தென் ஆப்பிரிக்காவை துரத்துகிறது..
♦ஆஸ்திரேலிய அணி 12 முறை உலகக்கோப்பையில் பங்கேற்று ...
♦8வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
♦20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
♦உலகக்கோப்பையின் தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 தோல்விகளைச் சந்தித்து ஆஸ்திரேலியா மோசமாகத் தொடங்கியது.
♦ஆனால், மீண்டு வந்து அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று ..
♦இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஐந்து முறை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.
♦தென் ஆப்பிரிக்கா அணி என்றாலே, முக்கியமான போட்டிகளில், தருணங்களில் பதற்றப்படும்,
♦வாய்ப்பைத் தவறவிடும் என்ற கூற்றை இந்த முறையும் உண்மையாக்கியது.
♦ஆனால், போட்டியின் முடிவை தங்களுக்குச் சாதகமாக மாற்ற தென் ஆப்ரிக்கா போராடியது.
♦ஆனால், 212 ரன்களை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்வது கடினமானது.
♦இன்னும் கூடுதலாக 50 ரன்களை சேர்த்திருந்தால், ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் சாய்ந்திருக்கும்.
♦தென் ஆப்பிரிக்கா அணியில் ஷாம்ஸி, மகராஜ், கோட்ஸி, மார்க்ரம் ஆகிய 4 பேரும் ...
♦மிகச் சிறப்பாகப் பந்துவீசி, ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
♦ஆனால், இவர்களின் பங்களிப்புக்கு வலுசேர்க்கப் போதுமான ஸ்கோர் இல்லை என்பது வருத்தமானது.
♦அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி எதிர்பார்த்த அளவு ஃபீல்டிங்கை ...
♦இதுபோன்ற முக்கியமான ஆட்டங்களில் வெளிப்படுத்தவில்லை.
♦ஃபீல்டிங்கிற்கு பெயரெடுத்த தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் மட்டும் 8 கேட்சுகளை கோட்டைவிட்டது.
♦முக்கிய கேட்சுகளை கோட்டைவிட்ட போதே ஆட்டம் கையைவிட்டுச் சென்றுவிட்டது.
♦அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க தோல்விக்கு கேப்டன் பவுமாவின் முடிவு முக்கியக் காரணம்.
♦வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், காலநிலை இருப்பது தெரிந்தும் ...
♦டாஸ் வென்று ஏன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
♦ஆனால், ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிப் போட்டி என்றவுடன் ...
♦தங்களின் கடந்த கால அனுபவங்களை ஒன்று திரட்டி ...
♦எவ்வாறெல்லாம் எதிரணிகளைக் குழப்புவது, சிதைப்பது, வீழ்த்துவது என்பதைத் திட்டமிட்டு செய்தனர்.
♦டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பணியை பாதி முடித்துவிட்டது.
♦ஆட்டநாயகன் விருதும் டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.
♦பந்துவீச்சிலும் தென் ஆப்பிரிக்காவின் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஹெட் ஏற்படுத்தினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...