Saturday, November 18, 2023

கந்த சஷ்டி விழா .

🌹 *கந்த சஷ்டி - முதல் நாள் விழா 13-11-2023 அன்று தொடங்கியது...*🌹
************************************************
🌹 *கந்த சஷ்டி விழா குறித்த பதிவு - பாகம் 1.*
************************************************
உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைப்பவரான பிரம்ம தேவரின் புத்திரர்க ளில் ஒருவர் காசிபர். அவர் சிவபெருமா னை நோக்கி கடுமையாக தவமிருந்து சிவபெரு மானிடம் பல வரங்களைப் பெற்றவர்.

ஒரு சமயம் தேவர்கள் யாவரும் வலிமை இழந்து இருந்த காலத்தில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களின் வளர்ச்சிக் காகவும், அவர்களின் சக்திக ளை அதிகரிக்கும் பொருட்டும் காசிபரின் தவ வலிமையால் அசுர குலம் தழைக்கும் பொருட்டு ஒரு திட்டம் செய்தார்.

தனது திட்டத்தை செயல்படுத்த அசுரகுல த்தை சேர்ந்த அசுரேந்திரன் மற்றும் மங்க ளகேசினி யின் தம்பதியருக்கு புதல்வியா க பிறந்த சுரஸையைத் தேர்ந்தெடுத்து அவளுக்கு தான் கற்ற பல மாய கலைக ளையும் கற்று தந்தார் சுக்கிராச்சாரியார். கலைகளை கற்றுத்தேர்ந்த சுரஸையை பலவாறு சோதித்தார்.
சுக்கிராச் சாரியாரின் பல கடினமான செ யல்களில் அகப்படாமல் கற்ற கலைகளை கொண்டு வெற்றி கொண்டாள் சுரஸை. அவளின் சாதுர்யமான அறிவையும், செய ல்திறனையும் கண்ட சுக்கிராச்சாரியார் இன்று முதல் மாயா என்று அழைக்கப்படு வாய் என்றும், பின்பு தனது மனதில் திட்ட மிட்ட எண்ணத்தை பற்றி யும் கூறினார்.
மாயாவிடம், அசுர குல தேவர்கள் வலிமை யும், அழிவுமின்றி இருக்க வேண்டும் என் பதே உன் தந்தையான அசுரேந்திரனின் ஆசையும், எண்ணமும் ஆகும். ஆனால், அசுர குலத்தை சேர்ந்தவர்களோ தேவர்க ளால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள்.
நம் குலத்தை சார்ந்தவ ர்களின் அழிவைத் தடுக்க இயலக்கூடிய வாய்ப்பு இப்பொழு து உனக்கு உள்ளது. நீ முயன்று அதில் வெற்றி பெற்று விட்டால் தேவர்களை நாம் அடக்கி நமது அதிகாரத் தையும், ஆட்சியையும் ஈரேழு உலகிலும் நிலை நாட்ட இயலும் என்றார்.
இதை கேட்டு ஆச்சரியம் மற்றும் அதே சமயம் மகிழ்ச்சியும் அடைந்த மாயா, அசுர குலம் தழைக்க நான் என்ன செய்ய வேண் டும்? குருவே என்று சுக்கிராச்சாரியாரிடம் கேட்டார். அதற்கு அவர் தன் மனதில் இருந்த திட்டத்தை மாயா அறிந்து கொள்ளும் விதமாக விளக்கி னார்.
பின்பு குருநாதரின் ஆணையை ஏற்று மாயா தன் தந்தையான அசுரேந்திரனிடம் தனது குருவின் திட்டத்தை பற்றி கூற அசு ரேந்திரரும் அகமகிழ்ந்து தனது மகளை வாழ்த்தி அனுப்பினார்.
சுக்கிராச்சாரியாரின் திட்டம் என்பது காசி பரை மாயா மயக்கி அவரின் மூலம் மிகச் சிறந்த வலிமை மிகுந்த அசுர வீரர்கள் பல ரை உருவா க்க வேண்டும் என்பதாகும். மாயா தனது மாய சக்திகளால் ஒரு புதிய மாளிகைகளையும், எழில் மிகுந்த நந்தவ னத்தையும் காசிபர் இருந்த கானகத்தில் எழுப்பினாள்.
பின்பு காசிபரின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள். அவள் எதிர்பார்த்த படியே காசிப ரும் அங்கு வந்தார். பின்பு, மாயா தான் கற்ற மாய சக்திகளால் காசிப ரை மயக்கினாள். இதனால் காசிபர் தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தார்.
காசிபரும், மாயையும் முதலாம் பொழுதில் மானுட உருவத்தில் இணைந்ததால் மானு ட தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் பொழு தில் சிங்க உருவில் இருவரும் இணைந்ததால் சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் பொழுதில் யானை உருவில் இணைந்ததால் யானை முகத்து டன் கூடிய தாரகனும், நான்காம் பொழுதி ல் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணை ந்ததால் ஆட்டுத் தலையுடன் கூடிய அசமு கி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.
இவர்களின் இணைவின்போது வெளிப் பட்ட வியர்வை மூலம் ஆயிரக்கண க்கான அசுர வீரர்கள் உருவாகினர்.
🌹 *ஷண்முகா சரணம்....*

May be an image of 1 person, temple and text that says 'எல்லாம் மாறும். உன் தற்போதைய நிலைமை மாறி மிக மிக அழகான ஒளிமயமான வாழ்க்கை உன்னை தேடி வரும். கலக்கமடையதே. உனக்கு நல்லதே நடக்கும். கற்கண்டு போல இனிக்கும் உன் வாழ்க்கை'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...