110 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பிறந்தவர். அவர் 1930களில் சென்னையில் பட்டமெல்லாம் பெற்றார்
பின்பு ராஜாஜியோடு காங்கிரஸ்காரராகி விடுதலைபோரில் பங்குபெற்றார், அவரை இலக்கியம்பால் திருப்பியது கல்கியின் படைப்புக்கள்
இனம் இனத்தோடு சேரும், தமிழ் தமிழ்ளோடு சேரும்
தரையில் கோழிகளோடு கழுகு இருந்தாலும் வானில் கழுகுகள் பறப்பதை பார்த்தவுடன் அதுவும் பறக்கும் அல்லவா?
சிங்ககுட்டி ஆடுகளோடு வளர்ந்தாலும் பலம் கொண்ட சிம்மத்தின் உறுமலை கேட்டுவிட்டால் அப்பக்கம் ஓடுமல்லவா?
இனம் இனத்தோடு, மனம் மனத்தோடு என்பது அதுதான்
அப்படி பாஷ்ய அய்யங்கார் எழுத ஆரம்பித்தார், எழுதினார் குவித்தார், பெரும் இடத்துக்கு வந்தார், இன்றுவரை தமிழில் அதிக வரலாற்று புதினம் நாவல் எழுதியவர் அவர்தான்
அவரை பாஷ்யம் என்று சொன்னால் தெரியாது, சாண்டில்யன் என்றால் புரியும்
அய்யங்கார் எனும் பெயரில் எழுத கூட அச்சம் இருந்த காலத்தில் அவர் சாண்டில்யன் என எழுதி குவித்தாரே தவிர அந்த அறிவும் தமிழும் அய்யங்காரின் தமிழ்
சாண்டில்யன் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றிக்கும் உரியவன் என பொருள்படும்
என் படைப்புகளை படிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி என பொருள்படும் சாண்டில்யன் என்ற பெயரை அவர் கொண்டிருந்தார்
அவருக்கு முதலில் தமிழ் இலக்கணம் தெரியாது, தமிழை கசடற கற்றபின்பே அவர் எழுத வந்தார்
தமிழ் இலக்கிய உலகில் என்றும் அவருக்கு தனி இடம் உண்டு “கடல் புறா” . “கன்னிமாடம்””யவன ராணி” எல்லாம் தனி முத்திரைகள்
சாண்டில்யனை படிக்காமல் யாரும் இலக்கிவாதி ஆகியிருக்கமுடியாது
பிராமணர் தமிழுக்கு என்ன செய்தார்கள்? எல்லாம் திமுக இம்சைகளின் உழைப்பு என சொல்வதை போல் அறியாமையும் மடமையும் வேறு எதுவும் அல்ல
திமுக திக இம்சைகள் எழுதிய உருப்படியான நூலோ இலக்கியமோ எதுவுமல்ல, சோவியத் யூனியனின் கம்யூனிச நூல்களை காப்பி அடித்து எழுதி இங்குள்ள கலாச்சாரத்தை குழப்பியதை கொடுத்த பெரும் பாவம் தவிர வேறொன்றும் அவர்கள் செய்ததில்லை
கல்கியும், சாண்டில்யனும் பிராமணர்களே, அவர்கள் தமிழை முறைபடி கற்றார்கள் அழியா காவியம் படைத்தார்கள்
அரசர்களின் வாழ்வு போர் ஆட்சிமுறை வித்தைகள் கருவிகள் அடையாளங்கள் என அக்கால வாழ்வினை செவி செவி வழியாக வந்த செய்திகளை வரலாற்று நாவலாக பதிய செய்தவர் அவர்
அதில் வரலாறு வாழ்க்கை சமூகம் என எல்லாமும் கலந்து கிடக்கின்றது, நாவல் என சொன்னாலும் அவை வரலாற்றை காட்டும் மியூசியங்கள்
சாண்டில்யனுக்கு இன்று பிறந்தநாள்
வரலாற்று நாவல்கள் எப்படி இருக்கவேண்டும் என தமிழருக்கு இலக்கணம் கொடுத்த அந்த பிதாமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
தமிழ் வாசிப்பாளர்களின் எக்காலமும் அன்புகுரியவர் அவர், அந்த பெயர் எக்காலமும் தமிழ் எழுத்துலகில் பதிந்தே இருக்கும்.
(ஹிந்தி எதிர்ப்பும் சமஸ்கிருத எதிர்ப்பு வெறியும் இருந்த காலங்களில் சாண்டில்யன் எனும் சமஸ்கிருத பெயரிலே எழுதி குவித்தார் பாஷ்யம் அய்யங்கார்
அவரின் எழுத்தை அவர் பெயரிலே வாசித்து மகிழ்ந்து தமிழனின் வீரம், கடல், கப்பல் என முழக்கமிட்டு கொண்டிருந்தன தமிழ்வெறி அரசியல் கூட்டங்கள்
சாண்டில்யன் என்பது சமஸ்கிருத பெயர் என அறியா அளவு முட்டாள்களான கூட்டம் அது, இன்னமும் அது அப்படியேதான் இருக்கின்றது )
No comments:
Post a Comment