லியோவில் த்ரிஷாவுடன் ரேப் சீன் இல்லையென்று லியோ வெற்றி விழா மேடையிலேயே மன்சூர் அலிகான் பேசிய போது த்ரிஷாவும், அரங்கத்தில் இருந்தவர்களும் சிரித்தனர்.
ஜெயிலரில் தமன்னாவுடன் ஆட முடியவில்லை, பேச முடியவில்லை என்று ஜெயிலர் விழாவில் ரஜினி கூறியபோது அரங்கமே சிரித்தது.
ராதாரவி வேரொரு சினிமா விழாவில் பேசும்போது ஹிந்தி தெரிந்திருந்தால் ஹிந்தியில் நடித்து ஐஸ்வர்யா ராயை ரேப் பண்ணி நடித்திருப்பேன் என்றார். அப்போதும் அரங்கம் சிரித்தது.
இன்னும் பல மேடைகளில் பல நடிகர்கள் இதேப்போன்று பேசியுள்ளார்கள்.
அனைவரும் சினிமாத்தனமாக பேசினார்கள். அனைத்து விழாவிலும் அரங்கத்தினர் சிரித்தனர்.
ரேப் சீன் இருந்திருக்கலாம் என்று மன்சூர் அலி கான் பேசியது பெண்ணியத்தை கேவலப்படுத்தும் பேச்சு என்றால் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இடம்பெற்ற ரேப் சீன்களெல்லாம் பெண்ணியத்தை கெளரவப்படுத்தும் செயலா ?
பெண்ணியத்தை கேவலப்படுத்தும் கூடாரமே இந்திய சினிமா தான் !
த்ரிஷா, குஷ்பூ, கஸ்தூரி உள்ளிட்ட நடிகைகள் மார்பை காட்டி, வயிற்றை காட்டி, தொப்புளை காட்டி, இடுப்பை காட்டி, தொடையை காட்டி நடித்துவிட்டு பணத்தை கோடிகளில் அள்ளி விட்டு திடீரென இவர்களெல்லாம் பெண்ணியத்தை பற்றி பேசுவது விபச்சாரி பத்தினி வேஷம் போடுவது போல் உள்ளது.
இத்தனை ஆண்டுகளாக ரேப் சீன்கள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், அந்த காட்சிக்கு செட்டில் விளக்கு பிடித்தவர்கள், இதர டெக்னீஷியன்கள், சென்சார் போர்டு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், வினியோகஸ்தர் சங்கம், திரை அரங்க உரிமையாளர் சங்கம், கண்டு ரசித்த ரசிகர்கள் என அனைவரும் பெண்ணியத்தை கேவலப்படுத்தியவர்கள் தான் !
பணத்துக்காக நாட்டை சீரழித்து, சமுதாயத்தை சீரழிக்கும் இவர்களெல்லாம் பெண்ணியத்தை கண்ணியப்படுத்தியவர்களா ?
தமிழ், தமிழ்நாடு, மண், மக்கள் என்று மாநில உரிமைக்காக எப்போதும் பேசக்கூடியவர் மன்சூர் அலி கான்...
சினிமா பிரபலமாக இருந்தாலும் பாலஸ்தீன் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கக்கூடியவர் மன்சூர் அலி கான்...
மாநில உரிமைக்காக பேசக்கூடியவர்களை நசுக்கக்கூடியவர்கள் யாரென்று நாடறியும்!
ரஜினி, ராதா ரவி, மன்சூர் அலி கான் பேசியது போல் பல மேடைகளில் பல நடிகர்கள் பேசியுள்ளனர். அனைத்தும் சிரிப்பாக பார்க்கப்பட்டது.
ஆனால் மன்சூர் அலி கான் பேசியது மட்டும் அரசியலாகி பூதாகரமாகியுள்ளது.
மன்சூர் அலி கான் பேசியது தவறு என்றால் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட ரேப் சீன்கள் மற்றும் படுக்கையறை காட்சிகள் அனைத்தும் தவறு என்பவனே யோக்கியன்!
மற்றவனெல்லாம் அயோக்கியன் !!
எழுத்து நானல்ல யாரோ...
No comments:
Post a Comment