தங்களின் அடுக்கு மொழி... அலங்கார பேச்சால் தமிழக அரசியலை முதன் முதலில் திசை வீழ்த்தி ய கட்சி திமுக....
அண்ணாதுரை தொடங்கி , அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் இணைந்து பேச்சாலேயே காங்கிரஸை வீழ்த்தினர்.
1967 ல் திமுகவின் பேச்சுத்திறனால் வீழ்ந்த காங்கிரஸ் இன்று வரை எழ முடியாமல் , இறுதியில் திமுக வின் காலடியிலேயே சுருங்கிப் போய் விட்டது.
இப்படி ஒரு கேடுகெட்ட நிலை எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்பட்டதில்லை...
ஆனால், பேசியே வளர்ந்த கட்சியை பேச்சிலேயே வீழ்த்திக் கொண்டிருப்பவராக இன்று அண்ணாமலை தோன்றியிருக்கிறார்.
அடுக்கு மொழி, வாய் ஜாலம், அவ்வப்போது அநாகரீகம்... நாலாந்தர நகைச்சுவை என்பதே திராவிடப் பேச்சின் பலமாக இருந்த நிலையில், அறிவு பூர்வமாகவும் அர்த்த பூர்வமாகவும் பேசி, பேச்சாலேயே திமுகவை வீழ்த்தும் கலை அண்ணாமலையிடம் அபரிமிதமாக குடி கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
அவருடன் மோதிய செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வர முடியாமல் தவிக்கிறார். பி.டி.ஆர்., பொன்முடி, எ.வ.வேலு போன்றவர்கள் அண்ணாமலையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஒடுங்கி விட்டனர்.
பல அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதில் அளிப்பதையே தவிர்க்கின்றனர்.
இன்று மனோ. தங்கராஜ் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்.
எதற்கு வீண் வம்பு என்று,பச்சை பாக்கெட் பால் நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு விட்டது.
இத்தனைக்கும் காரணம் அண்ணாமலை உடனுக்குடன் தரும் பதிலடிகள்தான்.
பேச்சு அவருக்கு பெரும் பலம். அரசியல் மேடை மட்டுமின்றி இதர மேடைகளிலும் ஆழமாகப் பேச அவரால் முடிகிறது.
அந்த காலத்தில் , அதிகார பலத்துடன் இருந்த திமுக வை எம்.ஜி.ஆரின் இமேஜ் வீழ்த்தியது. இன்று அதிகாரத்தில் இருக்கும் திமுக வை அண்ணாமலை தன் பேச்சால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.
பேச்சால் வளர்ந்த திமுகவுக்கு பேச்சே சவாலாக மாறியுள்ளது.
தமிழக அரசியல் மற்றொரு திருப்பத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது.
No comments:
Post a Comment