Monday, November 20, 2023

'வன்னியர்கள்' என்பவர்கள் யார்?

 

இன்று வாழும் வன்னியர்கள் எல்லோரும், தங்களை 'க்ஷத்ரிய குல வன்னியர்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள். அதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது என்னவென்றால், "நாங்கள் சூரிய வம்சம் என்றும், நாங்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள்" என்றும், "நாங்கள் சோழர்களின் பரம்பரையில் வந்தவர்கள்" என்றெல்லாம் கூறி எல்லா ராஜ வம்சத்துக்கும் பாத்தியதை கொண்டாடுகிறார்கள்.
மேலும், "பல்லவ அரசன் காடவராயன், திருக்கோவிலூர் மலையமான், மழவரையர், சம்புவரையர், கடம்பராயர்கள் முதலான பல சிற்றரசர்கள் எங்கள் முன்னோர்கள்" எனவும் சொல்லிப் பெருமை கொள்கின்றனர். அவர்கள் சொல்லாமல் விட்டது, 'பாண்டிய மன்னர்கள், சேர மன்னர்கள் எங்களுடைய முப்பாட்டன்கள்' என்னும் ஒன்று தான்!
நான் மேலே சொன்ன பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், சோழர்கள் காலத்தில், சிறு பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்களாகவும், சோழ மன்னர்களின் படைப் பிரிவுகள் ஏதோ ஒன்றின் தலைவராகவும் இருந்தது உண்மை தான். ஆனால், அந்தக் குறுநில மன்னர்களுக்கும், இன்று வாழும் வன்னியர்களுக்கும் என்ன தொடர்பு? பண்டைய வரலாற்று எச்சங்கள் எதுவும் இன்றைக்கு இருக்கும் வன்னியர்களிடம் இல்லையே?
மேலும், கடந்த நூற்றாண்டுகள் பலவற்றில் கூட, வன்னியர்களை 'பல்லி' (பல்லி) என்று விளிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. 'பல்லி' என்பது, தெலுங்கில் 'சிற்றூர்' அல்லது 'பட்டிக்காடு' என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இதை நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன் என்றால், வன்னியர்கள் வேளாள மரபைச் சேர்ந்த சிறு விவசாயிகள். ஏனைய பல சாதியினர் செய்தது போலவே, அவர்களும் போர்க் காலத்தில் தங்கள் மன்னருக்காக படைவீரர்களாகப் பணியாற்றி இருக்கலாம்.
விவசாயத்தைத் தங்கள் முழுநேரத் தொழிலாகவும், போர் எழுந்த சூழல்களில், படைவீரராகப் போராடுவதைத் தங்கள் பகுதி நேரத் தொழிலாகவும் செய்திருக்கக் கூடும். அது அன்றைக்கு வாழ்ந்த பல்வேறு சாதிகள்/பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே செய்தது தான். அதில் ஒன்றும் வியப்பில்லை.
இன்றைக்கும், தமிழ்நாட்டின் வட மாநிலங்களில் வாழுகிற வன்னியர்கள் விவசாயம் செய்வதை நான் நன்கறிவேன். அதனால், வன்னியர்களில் பெரும்பகுதியினர் ஏழையாகவும், அதிகம் கல்வி அறிவு பெறாத மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் உள்ளனர். ஆகையால், அவர்களைப் பிற்பட்ட சமூகத்தினராக அங்கீகரித்தது சரியே.
இருப்பினும், நம்மில் பலர் நினைப்பது போல அவர்கள் 'மிகவும் பிற்பட்ட சாதி' (Most Backward Class) அல்லர். அவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழுகிற ஊர்களில் எல்லாம், அவர்கள் ஆதிக்க சாதியாகவும், தீவிர அரசியலில் ஈடுபட்டு, பல கட்சிகளிலும், அரசாங்கத்திலும் பல்வேறு மட்டங்களில்பதவிகளில் எங்கும் நிறைந்திருக்கின்றார்கள். இதற்கு உதாரணங்களாக ஏராளமான பேர் இருப்பதால், அவர்கள் பெயரை எல்லாம் நான் இங்கே குறிப்பிடுவது நாகரிகமாக இருக்காது.
இன்றைக்கும், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை என்று ஆந்திரப் பிரதேச எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ்நாடு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்திலும் அதிக அளவில் வாழும் வன்னியர்கள், தம் தந்தையை 'நாயனா' என்ற தெலுங்குச் சொல்லைப் பயன்படுத்தியே அழைக்கிறார்கள். இது ஓர் உதாரணம் தான். வன்னியர்கள் பேசும், பயன்படுத்தும் தமிழ்மொழியில் தெலுங்குக் கலப்பு மிகுதியாக இருப்பது ஓர் ஆச்சரியம்.
தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதிகளில் நான் சுமார் 9 வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன். ஆகையால், அவர்கள் எல்லோருடனும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்களும் நிரம்ப எனக்கு வாய்த்தன. ஆந்திர எல்லைக்குள், அவர்கள் தம்மைத் 'தமிழர்' என்று அடையாளப்படுத்திக் கொள்வதே இல்லை.
எல்லா சாதிகளிலும் இருப்பது போலவே, வன்னியர்கள் இடையேயும் பலப்பல பிரிவுகள், உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆகவே, அது குறித்து நான் ஆராயப் போவதில்லை. அதற்கு நீண்ட காலமும், தொடர்ந்த உழைப்பும் தேவை.
இன்றளவும், இந்த வன்னியர்கள் யார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...