1)நமது தென்காசியில் இருந்து சுமார் 50கிமீ தூரத்தில் இருக்கும் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் (Kulathupuzha Sastha Temple)
2)அங்கிருந்து 25கிமீ தூரத்தில் இருக்கிறது உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில்(Aryankavu Sastha Temple)
3)அடுத்து அங்கிருந்து 40கிமீ தூரத்தில் இருக்கும் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில்(Achankovil Sree Dharmasastha Temple)
4)இதில் நான்காவது கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில்(Sabarimala Sri Ayyappa Temple).
2)அங்கிருந்து 25கிமீ தூரத்தில் இருக்கிறது உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில்(Aryankavu Sastha Temple)
3)அடுத்து அங்கிருந்து 40கிமீ தூரத்தில் இருக்கும் அச்சன்கோவில் ஐயப்பன் கோவில்(Achankovil Sree Dharmasastha Temple)
4)இதில் நான்காவது கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில்(Sabarimala Sri Ayyappa Temple).
இந்த நான்கு கோவில்களில் முதல் முன்று கோவில்களில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி உண்டு. அந்த மூன்று கோவில்களை அனுமதி இருக்கும் போது எதற்கு நான்காவது கோவிலில் இல்லை???
முதல் மூன்று கோவில்களில் தர்மசாஸ்தா ஐயப்பன் குழந்தை வடிவமாக குளத்துப்புழாவிலும் , சிறுவனாக ஆரியங்காவிழும் , வயதானவராக அச்சன்கோவிலிலும் இருக்கிறார். இது பக்தர்கள் நம்பிக்கை. இதில் நான்காவது இடமான சபரிமலையில் அதே தர்மசாஸ்தா பிரமசரிய தவம் மேற்கொண்ட நிலையில் இருக்கிறார்.
இந்தியாவில் தோன்றிய ஆன்மீக நம்பிக்கைகள் பலவற்றிலும் இந்தப் பிரமசரியம் உண்டு. அதன்படி தீவிரமான பிரமசரியம் என்பது பல கட்டுகாடுகளை தனக்குத் தானே கொண்டிருக்கிறது. அந்தவகையில் பிரமசரியம் மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் எதிர்பாலினத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள். உணவு முறையில் ஆரம்பித்து பலவித கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
அந்த வகையில் பிரமசரிய தவநிலையில் ஐயப்பன் தான் விலகி நிற்கிறார் தவிர பெண்கள் வரக்கூடாது என்றும் தீட்டும் என்று அல்ல. பிரமசரியம் மேற்கொள்கிறார் என்று விலகி நிற்க - அதை ஏற்றுத் தான் பெண்கள் விலகி இருக்கிறார்களே ஒழியே தீட்டு என்பதால் அல்ல. எனவே உண்மையான ஐயப்ப சுவாமியின் வரலாறும் அதன் விசயங்களும் அறிந்த அனைத்துப் பெண்களும் இதை மதிக்கிறார்கள்.
பிரமசரிய விரதம் இருந்து செல்லும் பக்தர்களுக்கும் இது மிக உணர்வை காயபடுத்தும் தீர்ப்பு.
காரணம் ஆண்கள் தலையிடாத நம்பிக்கைகள் பூஜைகள் வழிபாட்டு முறைகள் பெண்களும் செய்கிறார்கள் இருக்கிறது. தீட்டு அதனால் சபரிமலை கோவில் பெண்கள் வரகூடாது என்ற வாதமே தவறு.
இன்று இப்படித் தீர்ப்பு கூறுங்கள் , நாளை வெறும் கால்களுடன் கோவில் உள்ளே செல்வது கஷ்டமா இருக்கு செருப்பு போட்டு போக அனுமதி வேண்டும் இது பகுத்தறிவு இல்லை என்று எவனாது போடுவான் - அதுக்கு சரி சொல்வீரா??? கோவிலில் சட்டை போட்டுச் செல்ல கூடாது என்று ஆண்களுக்கு கட்டுபாடு உள்ள கோவில் விதி எனக்கு பிடிக்கவில்லை இது என்ன முட்டாள்தனம், சட்டை போட்டா என்ன இப்போ ? எனவே நானும் கேஸ் போடுறேன்னு ஒருத்தன் கேளம்புவான்... ஆக இந்தத் தீர்ப்பு நிச்சயம் கம்யுனிஸ்ட் கூட்டத்தின் திட்டமிட்ட வேலை - இதன் மூலம் தேவை இல்லைதா சச்சரவுகள் இனி தினமும் எழும்பும். இல்லை அந்தக் கோவிலின் பாரம்பரியத்தைக் கெடுக்க திட்டமிட்டுத் திரியும் கூட்டத்தின் சதி வேலையாகவும் இருக்கலாம் ஏன் என்றால் வழக்கை நடத்தியவர் பின்புலம் அப்படி இருக்கிறது.
எது எப்படியோ ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யும் திமுக என்ற கட்சிக்கு இனியாது வாக்கு செலுத்தும் முன் 2 நிமிடம் நீங்கள் சிந்தியுங்கள் "மற்ற மதங்கள் என்றால் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறும் அதே திமுக திக ஐயபபக்தர்கள் என்றால் கேலி கிண்டல் செய்கிறார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள் பிரசன்னா போன்றவர்கள் - திமுக கட்சி தலைவர் அதை வரவேற்கிறார்" என்றால் என்ன அர்த்தம்????
கேரளா தமிழகம் முழுவதும் நடக்கும் தர்மசாஸ்தா ஐயப்பன் பக்தர்கள் போராட்டம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment