ஐந்து வருடங்களுக்கு முன், எங்கள் ஊரில் எனக்கு நெருங்கிய உறவினர் என்னுடன் எப்போதும் அன்பாக பழகக்கூடியவர் அவரை அடிக்கடி வயலுக்கு போகையில் சந்திப்பதுண்டு ஆனால் கொஞ்ச நாளாக பார்க்கமுடியவில்லையே என அவரை மற்றவ்ர்களிடம் விசாரித்தேன்,
வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சொன்னார்கள்.அவர் வயதானவராக இருந்தாலும் நல்ல திடகாத்திரமானவர் அவரை வீட்டில் சென்று சந்தித்தேன்.
அப்போது 3 நாளாக கடுமையான மயக்கம் ரொம்ப முடியலை என்றார்.நான் நீங்கள் நலாமாகத்தான் இருந்தீர்கள் என்ன நடந்தது என விசாரித்தபோது,
பக்கத்து ஊரில் இருக்கு ஜோசியரிடம் இவர் ஜாதகத்தை காட்டியிருக்கிறார்,அவர் இவர் ஜாதகத்தை பார்த்துவிட்டு இன்னும் 4 மாதம்தான் உயிருடன் இருப்பீர்கள் என அடித்து கூறியவுடன் இவர் கலங்கி போய்விட்டார்.
உடனே நான் அவர் ஜாதகத்தை பார்த்து கணித்தேன் ஆயுள் தீர்க்கமாக இருந்தது அந்த பெரியவருக்கு தைரியம் சொல்லி அவர் மன தைரியத்திற்காக ஒரு கோயிலுக்கு சென்று வாருங்கள் என்றேன் இப்போது அவர் எந்த குறையுமில்லாமல் சந்தோசமாக இருக்கிறார்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒருவர் ஆயுளை யாராலும் சரியாக கணிக்க முடியாது என்பதுதான் உண்மை இருந்தாலும் அவருக்கு ஏறபடும் ஆபத்துகளை சரியாக கணிக்க முடியும்.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் உயிராகிய லக்கினாதிபதி,பூர்வ புண்ணியத்தை குறிக்கூடிய ஐந்தாமாதிபதி,பாக்கியாதிபதி வலுவாக இருந்து சுப கிரகங்கள் சரியாக இருந்தால் தீர்க்காயுள்.ஆயுள் காரகன் சனி ஆயுள் ஸ்தானத்தில் இருந்தாலும் பார்த்தாலும் தீர்க்காயுள்.இது மேலோட்டமான கணக்குதான் இதில் ஏகப்பட்ட சூட்சும ரகசியங்கள் இருக்கிறது.மேலோட்டமாக சொல்கிற கணக்கை வைத்து நாமே ஒப்பிட்டு பார்த்தால் குழப்பம்தான் வரும்.
இந்த பூமியை பொருத்தவரை நிர்ணயிக்கப்பட்ட ஆயுளை விட தீர்காயுளாக வாழ்ந்தவர்கள் ஏராளம்.(மார்கண்டேஸ்வரர்,சத்தியவான்)அதனால் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதம்,நல்ல எண்ணங்கள்,அடுத்தவர் மனதை சந்தோசபடுத்தும் குணம்,எப்போதும் பிரதிபலன் பார்க்காத அன்பு,பெற்ற தாய் தந்தையரை தெய்வமாக மதித்தல் இந்த குணங்களோடு வாழ்ந்தாலே போதும் தீர்க்காயுள்தான்.
மற்றவர்களுக்கு தன்னலமற்ற அன்பை செலுத்தி அவர்களின் ஆசீர்வாதத்தை வாங்குவதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?
No comments:
Post a Comment