Sunday, May 10, 2020

மாலத்தீவிலிருந்து 689 இந்தியர்கள் கப்பல் மூலம் கொச்சி வந்தடைந்தனர்.

மாலத்தீவிருந்து ஐ.என்.எஸ்., ஜலஸ்வா கப்பல் 689 இந்தியர்களை அழைத்துக்கொண்டு கேரள மாநிலம் கொச்சி துறை முகம் வந்தடைந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும் ஊரடங்கு அறிவித்துள்ளன. விமானம், கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான மாலத்தீவில் மட்டும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களை மீட்பதற்காக, , இந்திய கடற்படை கப்பல்களை மாலத்தீவுக்கு அனுப்பி, இந்தியர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் சமுத்ர சேவா' என பெயரிடப்பட்டுள்ளது.

latest tamil news




இதன்படி மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஐ.என்.எஸ்., ஜலஷ்வா என்ற இந்திய கடற்படை கப்பல், அந்த நாட்டுதுறைமுகம் சென்றடைந்தது. இதில், முதல் கட்டமாக, சுகாதார அதிகாரிகளுடன், 698 பேர் மீட்கப்பட்டு நேற்று கொச்சி துறைமுகம் வந்தடைந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...