Wednesday, May 6, 2020

*மே 7-ந் தேதி டாஸ்மாக் செல்ல நினைப்பவர்கள் இதை ஒரு முறை படித்துவிட்டு செல்லவும்.*

அரசு டாஸ்மாக்கினை திறக்கிறது. வரிசையில் நிற்க தயாராபவர்கள் இதனை கொஞ்சம் படியுங்கள். *ஒருவேளை உங்களுக்கு கரோனா வந்தால் என்னென்ன நடக்கும்.*
எதை எதையோ முகத்தில் அறையும் உண்மை என்று சலம்பும் நீங்கள் இதையும் படியுங்கள்.
டாஸ்மாக் கடை முன் *வரிசையில் நின்று முட்டி மோதி மது வாங்கிய போது அங்கே யாரோ ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது* என்று வைத்துக்கொள்வோம். சம்பந்தபட்ட கடைக்கு போனவர்களை ட்ரேஸ் செய்யும் பணி தொடங்கும்.
முதலில் *அந்தக்கடைக்கு சென்றவர்கள்* பரிசோதனைக்கு முன் வர வேண்டும் என்று அழைக்கப்படுவர். நீங்களாக போகாவிட்டால் *சிசிடிவி, அக்கம்பக்கம் புரளி என எப்படியும் உங்களை தூக்கிவிடுவார்கள்.*
நீங்கள் அப்படி பரிசோதனைக்கு போகும் போது *ஊர் உங்களை சும்மா விடாது.* எல்லார் வீட்டு பால்கனி மொபைல்களும் *நீங்கள் 108-ல்* ஏறி போகும் காட்சியை படமெடுக்கும்.
உங்கள் வீட்டில் ஒரு *கரோனா தொற்று காகிதத்தை* ஒட்டுவார்கள். உங்களுக்கு வேண்டாதவன் அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உலவ விடுவான். அவன் மனைவி அதை ஸ்டேட்டஸாக கூட வைக்கக்கூடும். *முடிந்த வரை வெட்டி ஒட்டி உங்கள் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் உலவ விடுவார்கள்.*
நீங்கள் எப்போது வீழ்வீர்கள் என்று பார்த்திருந்தவர்கள் உடனே *வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதரத்துறை* என்று போன் செய்து உங்களை பற்றி தகவல் கொடுக்கிறேன் என்ற பேரில் நீங்கள் அங்கே நின்றீர்கள் இங்கே நின்றீர்கள் என்றும் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போனீர்கள் என்றும் *கண், காது, மூக்கு* வைத்து மூளையின்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
அதுவே *வாட்ஸ் அப், பேஸ்புக்கில்* வலம் வரும். உங்களை ஒரு *தீவிரவாதி ரேஞ்சுக்கு நடத்துவார்கள்.*
உங்கள் *வீட்டாரை ஒதுக்கி* வைத்தது போல் சமூகம் நடத்தும். உங்கள் *குழந்தைக்கு பால்* வாங்க ஆள் பிடிப்பதற்கு கூட ஆள் கிடைக்க மாட்டான். உங்களை நலம் விசாரிப்பது போலவே, உங்களிடம் பேசி *பேனை பெருமாளாக்கி* பரப்பி விடும் வன்மக்காரர்கள் வட்டமடிப்பார்கள்.
இந்த *கூத்து எல்லாமே டெஸ்ட் எடுப்பதற்கு* முன்பே நடந்து விடும். நீங்கள் டெஸ்ட் எடுக்க போனால், உடனே எடுத்து உங்களுக்கு *முடிவு சொல்லமாட்டார்கள்.* ஒபில அட்மிஷன் சீட் வாங்கிட்டு முதல்ல அட்மிட் ஆகுங்க என்று பதில் வரும்.
அட்மிஷன் என்றதுமே *உங்களுக்கு கரோனா* உறுதியென்று ஊர்ப்பக்கம் ஊத ஆரம்பித்துவிடுவார்கள். வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் துணை போகும்.
*உங்கள் வீட்டுக்கு காவல்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறையிலிருந்து* ஆட்கள் வந்து விசாரணைகளை தொடங்குவர், தொடர்வர்.
ஒரு வழியாக டெஸ்ட் எடுத்தாலும் சென்னை, கோவை போன்ற மாநகர்கள் தவிர்த்த பகுதிகளில் முடிவு வர தாமதமாகும்.
ஆனால், சென்னையில் ஒருவர் 8-ம் நாளே 3 சோதனைகள் முடித்து வெளியேறிவிட்டார். மற்ற மாவட்டங்களில் நிலைமை அப்படியில்லை என்பதே உண்மை. *தாமதம் உங்களை விரக்தியில் அழுத்தும்.*
*வாழ்க்கையில் என்றைக்குமே உங்களை திரும்பி பார்க்காதவர்கள்* எல்லாம் போன் செய்வார்கள்.
*அக்கறையில் அல்ல.* நீங்கள் இருக்கிறீர்களா போய்விட்டீர்களா என்று சூழலை தெரிந்து கொள்ள.
அவர்களிடம் நீங்கள் நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியிருப்பீர்கள். *அவன் லேசா இருமுனான் என்கிட்ட வலியில அழுதான்* என்று வெளியில் சொல்வார்கள்.
ரிசல்ட் முடிவுகள் *நெகட்டிவ்* என்று வந்தாலும் நீங்கள் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவீர்கள். ஏனென்றால் மருத்துவமனையில் கூட கூட்டத்தில் ஒருவேளை ஏதாவது ஆகியிருக்கலாம் அல்லவா. *பாசிட்டிவ் என வந்தால் நிலைமை இன்னும் மோசம்.*
*உங்கள் பகுதி கண்டென்ய்ன்மெண்ட்* பகுதியாக்கப்படும். ’ஈ’, ’காக்கா’ கூட வெளிவர முடியாது. *ஊரெல்லாம் உங்களை ஏசும்.* உங்கள் *குடும்பத்தார் அனைவரும் மருத்துவமனைக்கு* அழைத்து செல்லப்படுவர்.
அங்கே தரப்படும் உணவை *உங்கள் குழந்தை உண்ண மறுத்து பட்டினியில் வாடலாம்.*
*காக்க வைத்து* தான் டெஸ்ட் எடுப்பார்கள். *தாமதமாக தான்* முடிவுகள் வரும். ஏனென்றால் கூட்டம் அப்படி. யாரையும் குறை சொல்ல முடியாது. *அவர்களுக்கு நெகட்டிவ்* என்று வந்தாலும் உடனே சொல்லி வீட்டுக்கு அனுப்பமாட்டார்கள். *ஊரில் பிரச்சினைகள் வரக்கூடும்.*
எனவே, மருத்துவமனையில் தனிமைப்படுத்துவார்கள்.
அடுத்து *கண்டெய்மெண்ட் பகுதியில் உள்ள மக்களை டெஸ்ட்* எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். மக்கள் *உங்களை சபிப்பர்.*
நல்லா இருக்கீங்களா?
என்ன மாத்திரை தராங்க?
என்ன சாப்பாடு?
எத்தனை நாள் ஆச்சு?
வீட்டில் யாருக்கும் இருக்கா?
என்ற கேள்விகளோடு வரும் *மொபைல் அழைப்புகளுக்கு நீங்கள் ஒரு நானூறு* முறையாவது பதில் சொல்ல நேரும்.
இன்னும் சிலர் *நல்லா இருக்கியா* என்று கூட கேட்க மாட்டான். நேரே அங்க கொடுக்கிற அந்த *மாத்திரை பேர* சொல்லுப்பா என்பான்.
அவ்வளவு முன்னெச்சரிக்கையாம்.
போதாக்குறைக்கு நீங்கள் போன இடம் வந்த இடம் எல்லாம் *மொபைல் மூலம் ட்ரேஸ்* செய்யப்பட்டு காவல்துறை போனில் உங்களை விசாரிக்கும். உங்களை மட்டுமன்றி உங்களுடன் *பேசியவர்களுக்கும்* போன் போகும். நீங்கள் பேசிய நபர் உங்கள் பகுதியாக இருந்தால், அவரும் சோதனைக்குட்படுத்தப்படுவார். *நண்பன் எதிரியாகும்* சூழல் ஏற்படும்.
*தனிமை...... தனிமை* என நாட்கள் நகரும்.
உடம்புக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும் *நீங்கள் நோயாளிகள்* தான்.
உடம்பு தேவலைல என்ற விசாரிப்புகள் வரும் போது *நல்லாதானே இருக்கோம் என்று வலிக்கும்.*
இத்தனையையும் நீங்கள் கடந்து வந்தால், உங்களுக்கு *முன்பிருந்த அதே வாழ்க்கை* அப்படியே இருக்குமா என்பதற்கு எந்த *உத்தரவாதமும்* இருக்காது. நீங்கள் நலமாகி வந்தால் கூட உங்களை பார்த்து *எல்லோரும் மிரளுவார்கள்.*
அவர்களுக்கு நீங்கள் அணுகுண்டாக தெரிவீர்.
உங்கள் வீட்டு வாசலில் யாருக்கேனும் பாதையிருந்தால், அவர்கள் அதனை அடைத்து சுற்றுச்சுவரின் பக்காவாட்டில் *உடைத்து எகிறி குதித்து செல்லும் காட்சிகளை காண நேரலாம்.*
போனில் விசாரித்த யாரும் ஒரு *200 மீட்டர் தள்ளி நின்று* உங்கள் வீட்டைக்கூட எட்டி பார்க்க மாட்டார்கள். வீட்டுக்கு வந்தாலும் தனிமை தான்.
உங்களை ஒரு *ஆப்ஜக்டாக மாற்றிவிடுவார்கள்.*நண்பர்கள், பணியிடம், உறவுகள்* எதுவும் எப்படி தொடருமென தெரியாது.
*பயத்தில் எங்கிருந்து யார் கல் வீசுவார்கள்* என தெரியாது.
இன்னும் *பத்தாண்டுகள் கழித்து கூட கரோனா வந்தவர் வீடு* அங்குதான் இருக்கு என்று அதைவிட *கொடிய நோய் தொற்றுடையவன்* உங்களை அடையாளம் காட்டுவான். ஏனென்றால் விளம்பரம் அப்படி.
பெரும்பாலானவர்களின் உடல் இந்நோயை தாங்கிக்கொண்டுவிடலாம்.
ஆனால், மேற்சொன்ன சம்பவங்களையெல்லாம் *தாங்கும் மனோபலம் உங்களுக்கு இருந்தால்* துணிந்து டாஸ்மாக்கில் கூடுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு அதை தாங்கும் சக்தி இருந்தாலும் *உங்கள் குடும்பத்துக்கு* இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
இவ்வளவு நாட்கள் நான் நோய் குறித்து நேர்மறையாகவே பேசி வந்தேன். ஆனால், டாஸ்மாக் என்பது 5000 உப கிளஸ்டர்களுடன் தமிழகத்தின் 3-வது கிளஸ்டர் ஆகிவிடக்கூடாது என்னும் *எச்சரிக்கை உணர்வில் தான்,* கரொனாவின் கருப்பு பக்கங்களை பகிர்கிறேன்.
*மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பது தெரியும் தானே.* ஆனால், இந்த *பெருந்தொற்று காலத்தில் மது ஒரு பேரிடர்* என புரிந்து கொள்ளுங்கள்..
*டாஸ்மாக் வேண்டாம் தனித்திருங்கள்!!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...