நீங்கள் நினைப்பது போல் ஒரு பிரச்சனைக்கு முடிவு எடுப்பது என்பது தோசை சுடுவது அல்ல வேணுங்கறப்ப திருப்பி போட்டுக்க
உதாரணத்துக்கு இந்த டாஸ்மாக் திறப்பு பிரச்சனைக்கு வருவோம்
எல்லோரும் என்ன சொல்லறீங்க இந்த நேரத்துல தொறந்தது தப்பு நாற்பது நாள் லீவு விட்டதுல குடிய மறந்துட்டாங்க னு அது உங்க நினைப்பு
ஆனா நடந்தது என்ன தெரியுமா ஊருக்குள்ள காய்ச்ச ஆரம்புச்சுட்டாங்க. சரி அதனால் என்ன நீங்க நினைக்கலாம். கைப்பக்குவம் பழகிட்டான்னா அப்பறம் அவன் காய்ச்சறத நிறுத்த முடியாது
நம்ம வீட்ல காய்ச்சறது தானே னு மறுபடி ரெண்டு டம்ளர் சேர்த்து குடிப்பான். அப்பறம் தாராள பிரபாகி மாப்ள மச்சானுக்கு எல்லாம் ஊத்திக்குடுப்பான்.
இப்ப சொல்லுங்க இங்க எங்க குடி ஒழியும்.
இப்ப சொல்லுங்க இங்க எங்க குடி ஒழியும்.
இந்த நாற்பது நாளுக்கே போலீஸ் ஓவர் டைம் பாக்க வேண்டியிருக்கு. காலம் பூராம் எத்தன போலீஸ் எத்தன இடம் பாக்கும் இப்படி காய்ச்சறத.
அதுபோக இப்ப அண்டை மாநிலங்கள்ல திறந்தாச்சு. அங்கிருந்து கடத்தல் ஆரம்பம் ஆகும். அப்பறம் அத தடுக்க தனிப்படை எத்தன போலீஸ் போடனும்
இப்படி எல்லா சிக்கலும் இருக்கு. இப்ப இருக்கற சூழ்நிலைல எது உடனடி சாத்தியமோ எது பாதிப்பு கம்மியோ அந்த தீர்வுக்கு தான் வர முடியும்
நமக்கு தான் எல்லாந் தெரியும் னு கருத்து சொல்லக்கூடாது. எல்லாம் தெரிஞ்சுட்டு கருத்து சொல்லனும்.
No comments:
Post a Comment