நன்றி கெட்ட ஸ்டாலினே உன் தந்தை கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீடு கூட அவருடையதுயில்லை ... திமுகவின் கூற்றுப் படியே பார்த்தால் அது கூட செல்வி ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலில் சேர்க்கப் பட வேண்டியது தான் . 16/01/1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த , கருணாநிதி குடும்பத்தின் தயாரிப்பில் வெளியாகி நூறு நாட்கள் ஓடிய #எங்கள்தங்கம் திரைப் படத்தின் வெற்றி விழா கூட்டத்தில்,
நீங்களும், உங்கள் மனசாட்சி என்று நீங்களே பல முறை ஒப்புக் கொண்டிருக்கும் முரசொலி மாறனும் பேசியது என்ன ? " முரசொலி பத்திரிக்கை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதாலும் , எங்கள் குடும்பம் தயாரித்த திரைப் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும் , எங்கள் குடும்பமே கடனாளிக் குடும்பமானது ., வாங்கியக் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை , வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது . குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் கூட ஏற்பட்டது ,

இந்த நிலைமையை புரட்சி நடிகர் எம் ஜி ஆரிடம் சொன்னேன் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த " எங்கள் தங்கம் " படத்தை பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர் . நடித்துக் கொடுத்தது மட்டுமின்றி , இந்தப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கித் தந்தனர் . . இந்தப் படத்தின் மூலம் வந்த லாபத்தால் , அடமானத்தில் இருந்த எங்கள் சொத்துக்களை மட்டுமின்றி , எங்களது மானத்தையும் மீட்டுத் தந்தவர்கள் , புரட்சி நடிகரும் , கலைச்செல்வியும் . அவர்களுக்கு எங்கள் குடும்பம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது .
" இப்படி முரசொலி மாறன் பேச .... அடுத்து பேசினார் கருணாநிதி : " மாறன் பேசும் பொழுது , புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை இங்கே குறிப்பிட்டார் . கொடுத்து கொடுத்துச் சிவந்தக் கரம் கர்ணன் என்று சொல்வார்கள் . ஆனால் எங்கள் திராவிடக் கர்ணன் புரட்சி நடிகருக்கோ , கொடுத்து கொடுத்து மேனியே சிவந்து விட்டது . கொடுத்து கொடுத்து சிவந்த கரம் உள்ள புரட்சி நடிகர் வாழ்கின்ற காரணத்தினால் தான் . அவர் வாழும் மாவட்டத்திற்கு "செங்கை " மாவட்டம் என்று என பெயர் வந்தது . நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவனின் வாக்கிற்கேற்ப . மாறனின் நன்றியுணர்ச்சியை நானும் வழிமொழிகிறேன் " இந்த நிகழ்வு 17/01/1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வெளியானது இது தான் அன்று கருணாநிதி பேசியது...
பிரசாந்த் கிஷோர் மட்டுமல்லாமல் உடன்பிறப்புகளும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான விஷயமும் கூட....
No comments:
Post a Comment