1981ல் தமிழ்நாட்டுல மதுவை அறிமுகப்படுத்தி கெடுத்தது எம்ஜிஆர்தான்னு ஒரு திமுககாரர் பதிஞ்சிருந்தார்!
நான் அது இல்லைன்னு மறுத்து, மதுவிலக்கு எப்படி ஆரம்பிச்சி எப்படி இன்னைக்கு இருக்கிற TASMAC வரை வந்ததுன்னு எழுதினேன்.
என்ன ஒன்னு, ஐயோ இளைஞர்களெல்லாம் குடிச்சி கெட்டுப்போறாங்களேன்னு ஆதங்கத்துல கருணாநிதி 1971ல் அறிமுகப்படுத்தாம இருந்திருந்தா நல்லா இருக்குமேன்னு போட்டிருந்தேன்.
அதுக்கு என்னை டயர் நக்கின்றீங்க 😳!
இன்பாக்ஸ்ல வந்து மிரட்டறீங்க 😁?!
ஒரு விஷயம் சொல்றேன். அது எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ, எடப்பாடியாரோ, மோடியோ யார் செஞ்சாலும் தப்புன்னா தப்புதான். அதை சத்தமா சொல்வேன்.
யாரு என்னன்னு தெரியாம ஏதோ சப்பைன்னு நினைச்சி மிரட்றத விடுங்க. என்னை பாதுகாத்துக்கற அளவுக்கு பலமும் பாதுகாப்பும் இருக்கு.
அட்ரஸ் வேணும்னு கேட்டுகிட்டே இருக்கீங்களே, எதுக்கு வந்து அடி வாங்கவா?!
நானும் ஒரு காலத்தில தானைத்தலைவான்னு நரம்பு புடைக்க கத்தினவன்தான்டா!
அப்புறம் இதுங்க லட்சணமெல்லாம் தெரிஞ்சிதான், இந்த சமூகத்தில இருந்து விலக்கனும், மத்தவங்களுக்கும் புரியவைக்கனும்னு இறங்கிட்டேன்.
இன்னும் பத்து வருஷத்துல கருணாநிதி வாரிசுங்களாம் இந்தியாவில இருந்தாலே ஆச்சர்யம்.
வெளிநாட்டுல வாங்கி வச்சிருக்கிற சொத்தையும், சேத்து வச்சிருக்கிற பணத்தையும் வச்சிகிட்டு அங்கேயே செட்டில் ஆயிடுவாங்க.
நித்தியானந்தாலாம் ஜுஜுபி. இவங்க கிட்ட இருக்கிற பணத்தை வச்சி நிஜமாலுமே ஒரு நாட்டை உருவாக்கமுடியும்!
அவங்களுக்கு தமிழ்நாட்டுல, இந்தியாவுல அரசியல் மற்ற வியாபாரம்லாம் வேலைக்காவாதுன்னு தெரிஞ்சா அடுத்த நாள் தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருப்பாங்க.
நீயும் நானும், நமக்கு அடுத்த தலைமுறையும், சொந்தக்காரங்களும்தான் இங்க இருக்கப்போறோம், நல்லது கெட்டதை அனுபவிக்கப்போறோம்.
காமராஜரே இன்னும் கொஞ்சம் காலம் ஆண்டிருந்தா நாடு இன்னும் எவ்ளோ நல்லாயிருந்துக்குன்னும், கருணாநிதி ஆண்டதால எவ்ளோ நாசமா போச்சின்னும் சொல்லிலாம் புரியவைக்கமுடியாது.
ஆனால் இனிமேவாச்சும் நாடு நல்லாயிருக்கனும்னா, நல்லவங்க ஆளனும்னு சொல்லமுடியும்.
இது திமுக கட்சிக்காரங்க நாடு இல்லை. எல்லோருக்கும் பொதுவானது.
அதனால அவங்கவங்க துருத்தியை அவங்கவங்களே ஊதுவோம்.
9 வருஷமா கூப்புல இருக்கும்போதே இப்படி பழக்கிவிட்டுருக்காங்களே, ஆட்சியில ஒக்கார வச்சா என்ன அநியாயம் செய்வீங்க!?

No comments:
Post a Comment