இந்தியாவின் கொரானா அதிகரிப்புக்கும்,
சர்வதேசத்தில் இந்தியாவின் இமேஜ் கெடுவதற்கும்
மூன்று பேர்தான் காரணம் .
முதல் இரண்டு பேர் ....
உத்தவ் தாக்கரே , அரவிந்த் கேஜரிவால் ..
கிட்டதட்ட நாட்டின் 40% பாதிப்படைந்தவர்களை கொண்டிருக்கிறது மகாராஷ்டிரம் .
நிர்வாக சீர்கேடுகளின் உச்சமாக பிணத்துடன் மனிதர்களையும் ஒரே அறையில் இருத்திய மாநிலம்.
கொரானா வந்தபோது ,
கல்யாணத்துக்கு வந்து மாப்பிள்ளையானவன்போல
தகுதி, திறமை, மக்கள் ஆதரவு எதுவுமே இல்லாமல் எப்படியோ முதல்வரான உத்தவ் ,
பதவியை நீடிக்க அங்கும்மிங்கும் அலைந்து கொண்டிருந்தார் ..
அதிகாரிகளுக்கு வழக்கமான சுழற்சி முறை பதவி உயர்வுகளைக்கூட கொடுக்காமல் ...நிர்வாகம் ஸ்டாண்ட்ஸ்ட்டில் .
அவருக்கு எந்த அதிகாரியையும் அழைத்து உத்திரவிடவோ கடிந்துகொள்ளவோ முடியவில்லை.
leadership இல்லாத கோமாளியால் ஆளப்படுகிறது மகா ராஷ்டிரம் ...கூடவே கும்மி அடிக்கிறது காங்கிரஸ்
பொலிஸாருக்கு முகக்கவாசம்கூட வழங்கப்படவில்லை .நாக்பூர் நீதிமன்றத்தில் மொத்த மாவட்டத்துக்கே
500 முகக்கவசங்கள்தான் கொடுக்கப்பட்டது என்று புலம்பினார் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி .
500 முகக்கவசங்கள்தான் கொடுக்கப்பட்டது என்று புலம்பினார் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி .
நாட்டிலே பொலிஸாருக்கு அதிக கொரனா இங்குதான்...இறப்பும் இங்குதான் அதிகம்
ஆண்டவன் விட்ட வழி என்பதாக போய்க்கொண்டிருக்கிறது அந்த மாநிலம் .
அடுத்தது டெல்லி ..
மாகானுபாவன் கேஜரிவால்
டெல்லியில்தான் மிகசிறந்த மருத்துவமனைகள் இருக்கிறது அடுத்த மாநிலத்திலிருந்து இங்கு வந்து விடு வார்கள் என்று சொல்லி எல்லைகளை மூடச்சொன்னார் கேஜரி .
இன்று பெட் இருந்தாலும் இல்லை என்று மருத்துவமனைகளை மூடுகிறார்களாம் ..ஆன்லைன் ட்ராக் சொல்வது வேறு இவர்கள் சொல்வது வேறு .
டெல்லியை லண்டனுக்கு நிகராக மாற்றுவேன் என்று சூளுரைத்த கேஜரி இப்போது கொரோனாவில் லண்டனுக்கு இணையாக வந்திருக்கிறார் ..விரைவில் முந்தவும் வாய்ப்பு
டெல்லி மக்களுக்கு கரண்ட் இலவசம் ,பஸ் இலவசம் ,தண்ணீர் இலவசம், இணையம் இலவசம் என்று தெருத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்தவர் இப்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாமல் மத்திய அரசிடம் 5000 கோடி கேட்கிறார் ...இந்த நிர்வாக புலி .
இந்த இரண்டு பேர் மட்டும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து
அரசியல் செய்யாமல்
ஒழுங்காக இருந்திருந்தால்
இன்று இந்தியாவில் இத்தனை பாதிப்புகள் இருந்திருக்காது என்பது அனலிஸ்ட்ஸ் கருத்து ..
சரி தலைப்பில் மூன்று பேர் இருக்கிறதே.. யார் அந்த மூன்றாவது நபர்?
எல்லாம் நமக்கு தெரிந்தவர்தான்..
மு.க.ஸ்டாலின் .
அவரை பற்றி தனியாகத்தான் எழுதவேண்டும் ...
No comments:
Post a Comment