Thursday, June 11, 2020

திருமணம் முதலான விசேஷங்களில் ஹாரத்தி சுற்றுவது ஏன்? பின் அதை வாசலில் உள்ள கோலத்தில் கொட்டுவது ஏன்?

ஹாரத்தி சுற்றுவது என்பது திருஷ்டி சுற்றிப்போடும் விதமாக திருமணம் முதலான விசேஷங்களில் செய்யப்படுகிறது. மஞ்சளில் சுண்ணாம்பும் தண்ணீரும் கலந்து அதனைச் சுற்றிவிட்டு நெற்றியில் திலகமிட்டு பின்பு அதனை வாயிலில் உள்ள கோலத்தில் கொட்டுவார்கள். ஒரு சிலர் ஹாரத்தி சுற்றும்போது அதில் கற்பூரம் ஏற்றியும் சுற்றுவார்கள். கண் திருஷ்டிக்காக பூசணிக்காய் சுற்றும்போது அதன் மேல் கற்பூரம் ஏற்றி சுற்றுவார்கள் அல்லவா, அதுபோல திருஷ்டி கழிய வேண்டும் என்பதற்காக ஹாரத்தி சுற்றி வாசலில் கொட்டுகிறார்கள்.
பூசணிக்காயை சுற்றி முடித்த பின்னர் வாசலில்தானே போட்டு உடைப்பார்கள்.? அதே போல ஹாரத்தியையும் சுற்றி முடித்த பின்னர் வாசலில் சென்று ஊற்றிவிடுகிறார்கள். பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் முதலானவற்றை திருஷ்டி சுற்றிப்போடுவது ஆண்களின் செயலாகவும், ஹாரத்தி சுற்றுவது என்பது பெண்களுக்கான கடமையாகவும் வைத்திருக்கிறார்கள். ஹாரத்தியை ஆண்களும், பூசணிக்காய் முதலானவற்றை பெண்களும் சுற்றக்கூடாது. மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த அந்த ஹாரத்திக்கு நோய்தொற்றுக் கிருமிகளை விரட்டும் சக்தி உண்டு. எந்தவிதமான நோய்தொற்றுக் கிருமிகளும் வீட்டிற்குள் அண்டக் கூடாது என்பதற்காக நமது முன்னோர்கள் இந்த சம்பிரதாயத்தினை வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...