Thursday, June 11, 2020

நவகிரகங்களின் தோஷத்திற்காக பரிகார பூஜை செய்யும்பொழுது ராகு காலம், எமகண்டம் பார்க்க வேண்டுமா?

பரிகார பூஜை என்பது பலனை எதிர்பார்த்துச் செய்வது. கிரகங்களின் மூலமாக நம்மைப் பிடித்திருக்கும் தோஷம் நீங்குவதற்காக பூஜை செய்வது என்பது தினசரி சாதாரணமாக செய்யப்படுவது அல்ல. அதற்கென நாள் பார்த்து, தனியாக விசேஷ பூஜை செய்யும் பட்சத்தில் ராகு காலம், எமகண்டம் பார்த்துத்தான் செய்ய வேண்டும். இந்த விதிமுறை பூஜை துவங்குவதற்கு மட்டுமே பொருந்தும்.
இதுபோன்ற காலங்கள் வருவதற்கு முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ பூஜையைத் துவக்கலாம். பூஜை துவங்கிய பின்னர் இடையில் இந்த காலங்கள் குறுக்கிடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. தொடர்ந்து நடைபெறலாம். அதே போன்று பூஜையை முடித்து பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளும்போது ராகு காலம், எமகண்டம் ஆகியவை குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...