டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களின் அப்பீலை ஒட்டி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனது அப்பீலில் டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி, இந்தியாவில் உள்ள அனைத்து நியூஸ் சானல்களும், ஊடக நிறுவனங்களும் இந்தியர்களையே சொந்தக்காரர்களாக கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் உண்மை என்ன வெனில், நியூஸ் சானல்கள் மற்றும் செய்தி நாளிதழ்களில் பெரும்பாலானவை சவூதி அரேபியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துபாய் குடிமக்களுக்கே சொந்தமாக இருக்கின்றன.
சொந்தம் கொண்ட உரிமையாளர்களின் நிலை இப்படி இருக்க, இந்த ஊடகங்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் இசைக்கும் பாட்டுக்கு டான்ஸ் ஆடவேண்டிய நிலையில் உள்ளன. அவற்றின் சொந்தக்காரர்களுக்கோ தாங்கள் அடைய வேண்டிய, யாருக்கும் தெரியாத சொந்தக் குறிக்கோள் இருக்கிறது.
தேசத்தின் நலனைக் கருதி, சுப்ரீம் கோர்ட் இந்த நிலையை மாற்றத் தகுந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று அவரது அப்பீல் முடிகிறது.
சுப்ரீம் கோர்ட் உறுதியான, இறுதியான ஒரு ஆணையை டாக்டர்.சுப்ரமணியம் ஸ்வாமி அவர்களின் அப்பீலுக்கு தந்து விட்டால் – ABP, AAJ, TAK, NDTV மற்றும் அதையொட்டிய சானல்களும்/செய்தித்தாள் ஊடகங்களும் மூடப்படும்.
இந்த வார்த்தையைக் கேட்ட வினாடியிலிருந்து அந்த ஊடக நிறுவனங்கள் அடிவயிறு கலங்கி ஆடிப் போயுள்ளன. அவை கவலையின் உச்சிக்கே போய்விட்டன.
ஆனால் இதில் பரிதாபகரமான ஒரு விஷயம் என்னவெனில், எப்போதுமே பரபரப்பைப் பரப்பி விட்டுக்கொண்டே இருக்கும் இந்த சானல்கள் இந்த செய்தியை ஃப்ளாஷ் நியூஸாகவும் வெளியிட முடியவில்லை. டி.வியில் பளீர் செய்தியாகவும் காண்பிக்க முடியவில்லை; செய்தித் தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட முடியவில்லை.
உண்மையான இந்தியர்களாகிய நாம் இந்த செய்தியை தேசம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்வோமாக...!
No comments:
Post a Comment