Monday, December 14, 2020

*ஆன்மிக தகவல்கள் இன்று அமாவாசை குலதெய்வத்தை வழிபடுங்கள்*

 

🤘🐚ஹரி ஓம் நமசிவாய🔱🤘
ஒருவருக்கு எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் இருந்தாலும் , அவர்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் போது , அந்த தோஷத்தில் இருந்து எளிதில் விடுபட முடியும் . அவர்களிடம் எந்த கிரகமும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது காலம் காலமாகவே உணர்ந்து வரும் நம்பிக்கையாக உள்ளது . இந்நிலையில் , அமாவாசை தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்வதால் , மிகுந்த பலன்களை பெற முடியும் .
*அமாவாசை வழிபாடு*
அமாவாசை அன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் நமது நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் . பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் . இந்த வழிபாடு தொடர்ந்து செய்து வருவது மிகவும் நல்லது . இருள் சூழ்ந்த தினமாயினும் , ஒளி ஏற்றும் வகையில் குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும் . எனவே , மற்ற நாட்களில் இயலாது போனாலும் அமாவாசை நாட்களில் நிச்சயம் வழிபட வேண்டும் . வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு முதல் அழைப்பு குல தெய்வத்திற்கே என்பதும் சம்பிரதாயம் ஆகும் . குலதெய்வ வழிபாடு குறித்து மீளும் பார்க்கலாம் .
*திருமணம்*
குலதெய்வ வழிபாடு உறவுகளை நெறிப்படுத்துவதோடு , அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது .
தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குலதெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது .
இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால் தான் குலதெய்வ வழிபாட்டு முறை தோன்றியது .
குலதெய்வ வழிபாடு என்பது உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது .
• சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீதி கேட்கும் வகையில் ஆங்காங்கு குலதெய்வ வழிபாடு முதலில் நடந்தது . தவறு செய்பவர்கள் குலதெய்வங்களுக்கு பயந்து ஒழுக்கமாக வாழ்ந்தனர் .
• நோய்கள் நீங்கவும் , குழந்தை வரம் கிடைக்கவும் , திருமணம் நடைபெறவும் வேண்டி மக்கள் குலதெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு .
. *வம்ச விருத்தி*
பெரும்பாலான குலதெய்வ வழிபாடுகள் சூலம் , பீடம் , மரம் , கரகம் , கல் , பெட்டி போன்ற அடையாள குறியீடுகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன .
குலதெய்வ வழிபாடுகளில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடைபெறும் .
குலதெய்வங்களுக்கு கருவாடு , சுருட்டு , கஞ்சா , சாராயம் போன்றவற்றை படையல் செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது .
குலதெய்வ வழிபாடுகளின் போது சாமி ஆடுபவர்கள் அருள்வாக்கு சொல்வதுண்டு .
• குலதெய்வ கோயில்கள் ஆகம விதிப்படி கட்டப்பட்டிருக்காது . இடத்திற்கு ஏற்பவே அமைந்திருக்கும் .
• குலதெய்வ கோயில்கள் பெரும்பாலும் வடக்கு அல்லது கிழக்கு திசை ' நோக்கியே கட்டப்பட்டிருக்கும் .
குலதெய்வ கோயில்களில் பரிவார தேவதைகளுக்கும் இடம் கொடுப்பதுண்டு .
குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது .
குலதெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு , அசைவ வழிபாடு என இரு வகை உண்டு . பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது .
குலதெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும் .
குலதெய்வத்திற்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள் .
தமிழ்நாட்டில் சமய வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்த ராபர்ட் ரெட் பீல்ஸ் என்ற சமூகவியல் அறிஞர் , தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் அதே அளவுக்கு குலதெய்வ வழிபாடும் உள்ளதாக எழுதி உள்ளார் .
*5 முக ருத்ராட்சம்*
அமாவாசை தினத்தன்று குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறப்பு என்பதால் , சிவனுக்கு பிரியமான ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்து குல தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் .
🤘🐚ஹரி ஓம் நமசிவாய🔱🤘
Image may contain: 3 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...