Sunday, December 13, 2020

சூதும் வாதும் செய்யும் படித்தவன் - சுகி.சிவம் - இவர் ஆன்மீக பேச்சாளரா? அல்லது இந்து விரோதியா?

 "படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்!" என்கிறார் பாரதியார்.  பாமரர்களிடம் சூதும் வாதும் எப்போதுமே இருந்ததில்லை. மெத்தப் படித்தவர்களிடம் கண்டிப்பாக இரண்டும் காணக் கிடைக்கும்.  

சுகி.சிவம் அவர்கள் உண்மையிலேயே இந்துவா அல்லது இந்து விரோதியா என்ற கேள்வி அண்மைக் காலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று ஒரு பழைய தமிழ் பாடல் வேண்டுகிறது.  இந்து ஆன்மீகப் பேச்சாளர் என்பது நெஞ்சில் உள்ள வஞ்சகத்தை மறைக்கும் வேடமா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  மெத்தப் படித்தவர் என்பதால், பேரும் புகழும் பெற்று வாழும் சுகிசிவம் அவர்கள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்து மதத்தை சீண்டிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  முருகன் வேறு; சுப்பிரமணியனை வேறு; என்று சுகிசிவம் அவர்கள் பேசியது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அத்தி வரதர் பற்றி சுகி சிவம் பேசிய விஷயங்கள் ஹிந்து ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்தியது.
மெத்தப் படித்தவர் என்பதால் இவரது செயல்முறை மிகவும் ஆழ்ந்து சிந்தித்து உருவாக்கிய செயல்முறையாகும்.  ஏன் இதுபோல சர்ச்சை பேச்சுகள் என்று கேட்டால், "என்னுடைய 40 நிமிட பேச்சிலிருந்து ஒரு சில நிமிடங்களை மட்டும் தனியே எடுத்து சர்ச்சையை உண்டாக்குவது சரியல்ல"  என்று சொல்லித் தப்பித்து விடுகிறார்.  "நான் இரண்டு லிட்டர் பால் வைத்துள்ளேன், அதில் இரண்டு தேக்கரண்டி விஷம்தான் கலந்துள்ளேன்" என்று சொல்வதைப் போலத்தான் இவரது வாதமும்.
"1526 ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட் போர் நடந்தது பாபருக்கும் இப்ரஹிம் லோடிக்கும் என்பதை நாம் அறிவோம். போரில் இரண்டு புறமும் நின்று சண்டையிட்டது இஸ்லாமிய வீரர்கள்.  பாபர் ஜெயித்தார் என்பது வரலாறு.  இந்துமதத்தில் உள்ள ஜாதிப் பிரிவினைகள் காரணமாகத்தான் பாபர் போரில் வென்றார் என்கிறார் சுகி.சிவம். இரண்டுமே இஸ்லாமிய படைகள் தானே இதில் எங்கிருந்து இந்துமத ஜாதிப் பிரிவினைகள் உள்ளே வந்தது?  இவர் மனதில் உள்ள ஜாதி வன்மம் வார்த்தைகளாக வெளிவருகிறது. இந்து மதத்தை சீண்டிப் பார்ப்பதற்காக பொய்களை கூறுவதற்குக் கூட வெட்கப்படுவதில்லை இவர்" என்கிறார் சமுக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.
சுகிசிவம் அவர்கள் மெத்தப் படித்தவர்.  இவரது ஆன்மீகப் பேச்சுக்கு பல லட்சம் இந்துக்கள் ரசிகர்களாக உள்ளனர். ஆனால், அவ்வப்போது இந்து மதத்தை இவர் சீண்டிப் பார்ப்பதை கவனிக்கும் போது, சுகி சிவம் அவர்கள் உண்மையிலேயே இந்து மத ஆன்மீகப் பேச்சாளரா?  அல்லது வெளியே ஆன்மீக பேச்சாளராகவும் உள்ளே இந்து விரோத வன்மமும் கொண்ட கபடவேடதாரியா? என்ற கேள்வி எழுகிறது என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.
இது குறித்து நம் ஆசிரியர் குழுவை சேர்ந்த ராகவேந்திரனின் சிறிய காணொளி, இதோ உங்களுக்காக ⬇️  .
சுகி சிவம் மிகப்பிரபலமான ஆன்மீகப் பேச்சாளர். ஆழ்ந்த புலமை கொண்டவர்.  நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.  பல லட்சம் இந்துக்கள் சுகி. சிவம் அவர்களின் ஆன்மீக உரை கேட்டு மகிழ்கிறார்கள். இவர் வேண்டுமென்றே இந்துக்களை, இந்து மதத்தை சீண்டுகிறார் என்று நாம் கூற இயலாது.  ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சந்தேக ஊசியின் முனைகள் சுகி.சிவம் மீது திரும்பி உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
கவனம் தேவை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...