தொலைக்காட்சிகளில் நெறியாளர்கள் என்ற பெயரில் வலம்வருபவர்கள் பெரும்பாலும் நெறிதவறி நடந்துகொண்டு, நரி போல செயல்படுவதை நாம் பார்த்து வருகிறோம். இடதுசாரி சிந்தனையாளர்கள் பேசும்போது இந்த நெறியாளர்கள் குறுக்கிடுவதில்லை. ஆனால் பாஜக அல்லது வலதுசாரி சிந்தனையாளர்கள் பேசும்போது இந்த நெறியாளர்கள் பலமுறை குறிக்கிடுகிறார்கள். இவர்களது சிந்தனை ஓட்டத்தை தடை செய்கிறார்கள். வேண்டுமென்றே பல குறுக்குக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, December 13, 2020
புதிய தலைமுறையின் பார்வை கோணல் பார்வையாக உள்ளது - மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் அதிரடி விமர்சனம்..
தனியார் நிறுவனங்களில் சம்பளம் தரும் போது Fixed Pay & Variable Pay என்று இரண்டு விதமாக சம்பளம் தரப்படுகிறது. நெறியாளர்களின் செயல்பாட்டை கவனிக்கும் போது, இவர்களின் Variable Pay, எத்தனை முறை பாஜக ஆதரவு பேச்சாளர்களை குறுக்கீடு செய்கிறார்கள் என்பதை ஒட்டி அதிகரிக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.
அண்மையில் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் அவர்களை பேச விடாமல் பலமுறை குறுக்கீடு செய்து அவரின் சிந்தனை ஓட்டத்தை தடை செய்தார் புதிய தலைமுறையின் நெறியாளர் கார்த்திகை செல்வன். சாதாரணமாக அமைதியாக இருக்கும் ராஜகோபாலன் அவர்களையே இந்த செயல் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. புதியதலைமுறை ஏன் மோடிக்கு எதிராக செயல்படுகிறது? புதிய தலைமுறை தொலைக்காட்சி என் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறது? அமெரிக்கை நாராயணன் பேசும்போது ஒரு முறை கூட குறிக்கிடவில்லை. ஆனால் என்னை பேச விடாமல் பலமுறை குறுக்கீடு செய்தீர்கள். இதற்கு என்ன காரணம்? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன்.
நெறியாளர்கள் பொதுவாக நடுநிலையாளர்களாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றால் வசந்த் தொலைக்காட்சியில் சேர்ந்து விடலாமே. சன்டிவி அல்லது கலைஞர் டிவியில் இணைந்து நேரடியாகவே திமுக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தலாம். இதைவிடுத்து நடுநிலை தொலைக்காட்சியில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது சரி இல்லை என்கிறார் அரசியல் விமர்சகர் அண்ணாமலை.
கட்சி சார்பு நிலை எடுக்கும் நெறியாளர்கள் நடுநிலை தொலைகாட்சியில் தொடர்ந்து பணியாற்றும் தகுதியை இழக்கிறார்கள்.
கார்த்திகைச் செல்வனுக்கு நாட்கள் எண்ணப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment