ஒரு காட்டில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான பனைமரம் ஒன்று இருந்தது.
அதனருகே புதிதாய் தோன்றிய ஓர் ஓனான் கொடி கிடுகிடுவென்று அதன்மீது படர்ந்தது.
சில மாதத்திற்குள் பனை மரத்திற்கு இணையாக வளர்ந்து விட்டது.
அப்பொழுது அந்த ஓனான் கொடி
“இந்தச் சில மாதமாக" இந்த பனைமரம் ஓர் அங்குலம் கூட உயரவில்லையே!
இதற்கு வளர தெரியாது போல இருக்கிறது என்று சொல்லி ஏளனமாக சிரித்தது.
அதற்க்கு பழமையான பனைமரம் சொல்லிற்று
“நான் பிறந்ததிலிருந்து பதினாயிரம் ஒனான் கொடியைப் பார்த்திருக்கிறேன்.
"நீ " பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொரு கொடியும் இப்படித்தான் கேட்டது.
எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை”
*என்மீது படர்ந்து வளர்ந்து என்னையே குற்றம் கூறினாலும் நான் வருத்தப்பட மாட்டேன்.*
*ஏனென்றால் நான் உங்களுக்கு தாயானவள் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே*
*_" காற்று பலமாக வீச "_*
*அந்த ஓனான் கொடி பனைமரத்தை இறுகத்தழுவியது .*
*மேலும் காற்று மிக மிக பலமாக வீச வலுவிழந்த ஓனான் கொடி வீழ்ந்தது.*
*அப்போது அந்த பனைமரம் இறந்துவிட்ட ஓனான் கொடிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு அடுத்த ஓனான் கொடியின் பிறப்பை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது.*
*_அந்த பனைமரத்தின் பெயர்
"சனாதன தர்மம் "_
No comments:
Post a Comment