போன வாரம் கல்யாண பத்திரிக்கை வைக்க, தூரத்து சொந்தம்னு சொல்லி இரண்டு பேர் வந்தாங்க. வந்தவங்களை வரவேற்றதோடு சரி, சேர் போட்டு உட்கார வைத்துவிட்டு, அம்மாவை அழைக்க சென்றுவிட்டேன். அந்த நேரம் பார்த்து வந்த பாட்டி, "அவங்க எல்லாம் எவ்வளோ பெரிய சொந்தம் தெரியுமா? வந்தவங்களுக்கு ஒரு சொம்பு தண்ணி கூட மோந்து கொடுக்காம, அம்மாவ கூப்பிட போயிருக்க. இவ்வளோ பெரிய பையனாகி, இது கூட தெரியாம இருக்கியேன்னு" அதட்டிக்கொண்டே சமையல்கட்டிற்கு நகர்ந்தார்.
ஆமாம்ல! நானும் எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு போனாலும் முதலில் ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்த பிறகே எதுவா இருந்தாலும் பேசுவாங்க. எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரல என்பது மட்டும் புரிந்தது. நம்ம பண்பாட்டில் ஒரு பழக்கம் இருக்கு என்றாலே, அது காரணம் இல்லாமல் இருக்காது. வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பதற்கு, பின்னாலும் பெரிய தகவல் பெட்டகமே மறைந்து இருப்பதை போகப்போக அறிந்து கொண்டேன்.
அந்தக்காலத்தில் வசதி படைத்தவர்கள் தவிர, மற்ற எல்லோருமே நடராஜா சர்வீஸ் மட்டும் தான். உறவினர்கள் வீட்டுக்கு வருகிறார்கள் என்றால், பல மைல் தூரம் நடந்து களைத்துப்போய் வந்திருப்பார்கள் என்று அர்த்தம். வந்தே உடனே அவர்களின் களைப்பை போக்கி உடனடி ஆற்றல் தருவது நீர் மட்டுமே. சில வீடுகளில் வெண்ணெய் எடுத்து சிலுப்பி வைத்த மோரும் கொடுப்பாங்க. ஆனால் எல்லா வீடுகளிலும் மோர் இருக்காது அல்லவா? அவங்களால் இயன்ற நீரை கொடுத்து, புன்சிரிப்போடு வரவேற்பார்கள்.
தண்ணீருக்கு ஒரு சாந்தப்படுத்தும் தன்மை உண்டு. ஒருவர் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும்போது நெ கடிவ் எனர்ஜி, உணர்வுகள், கோபம், ஆத்திரம்,துக்கம், பொறாமை போன்ற எண்ணங்களை நீர் உட்கிரகித்துவிடுகிறது. தண்ணீர் ஒரு சிறந்த கடத்தி என்பதால் உணர்வுகளையும் கடத்தும். சண்டைபோட வருபவருக்கும், முகம் மலர்ந்து தண்ணீர் கொடுத்தால், உங்கள் உணர்வை அவருக்கு கடத்தப்படும். சோகமாகவோ, சோர்வாகவோ வருபவருக்கு நல்லெண்ணத்துடன் தண்ணீர் அளிக்கப்படவேண்டும். ஆறு குளங்கள் நீர்நிலைகளுக்கருகில் தியானம் செய்வதும் பிரதிபலிப்புக்காகவே.
No comments:
Post a Comment