Monday, August 2, 2021

" ஆடி 18 ம் பெருநாள் "

 அன்பர்கள் அனைவருக்கும் ஆடி 18 ம் பெருநாளான திருநாளில் என் வாழ்த்துக்களையும் ,வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன் .

இத்திருநாளில் நம் காவிரி அன்னையை கொண்டாடி மகிழ்வது தமிழ்நாட்டின் தொன்று தொட்டு வரும் மரபாகும்.
காவேரி ஆனவள் அகத்திய மாமுனிவரின் மனைவியாவாள். இவள் விதர்ப்ப நாட்டு மன்னனாகிய கவேரன் என்பவனது மகள் ஆவாள்.
எனவே காவிரி என்றும் அழைக்கப்படுகின்றாள்.
மித்திர வருணன் என்ற மாமுனிவரின் புதல்வர்களே அகத்திய மாமுனிவரும், வசிஷ்ட மகரிஷியும் அவர்கள்.
மகாபாரத இதிகாசத்தில் வனப்பருவம் அத்தியாயம் (96,97,89ல்) அகத்திய மாமுனிவர், லோபாமுத்திரை அம்மையின் குறிப்புகள் உள்ளன.
அகத்திய மாமுனிவரின் கமண்டலத்திலிருந்து பாய்ந்து பெருகி உற்பத்தி ஆனவளே காவிரித்தாய். தமிழை போற்றி காப்பதற்காகவே இருவரும் அவதரித்தார்கள்.
அகத்திய மாமுனிவர் ரிக் வேதத்தில் இருபத்தாறு சூத்திரங்களும், ரிக்வேத காலத்து 27 பெண் முனிவர்களில் ஒருவரான லோபாமுத்திரையும் 179 மந்திரங்களும் படைத்து அருளினார்கள்.
இருவரும் லலிதா சகஸ்ர நாமத்தை பரத கண்டம் முழுவதும் பரவி கற்பித்தார்கள். ஸ்ரீ லலிதா தேவியின் மிக்க அன்புக்கு பாத்திரமானவள் லோபாமுத்திரை அம்மை ஆவாள்.
அகத்திய மாமுனிவர் தமிழுக்கும், ஜோதிடத்திற்கும் ,மருத்துவத்திற்கும் தன் புலமையினால் பெரும் தொண்டு ஆற்றி உள்ளார்.
இருவருக்கும் பிறந்த புத்திரனே திரிதாயுசி என்னும் முனிவர் ஆவார்.
இம்முனிவரும் ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் இயற்றியுள்ளார்.
காவேரித் தாயின் சிறப்பு :
நாடு செழிக்க நதிகளை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடிப்பெருக்கான நன்னாளை நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
காவேரி தாய் மண்ணின் வளம் பெருக பாய்ந்தோடி வரும் இடங்களெல்லாம் ஆடிப்பெருக்கு இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவள் குடகு மலையில் உற்பத்தியாகி பின் கர்நாடகத்தில் தலைக்காவேரியாக உருவெடுத்து பின் தமிழகத்தில் பாய்ந்து தமிழகத்தையும் செழிக்கச் செய்கின்றாள்.
ஸ்ரீ ரெங்கநாதர் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருளி காவிரித் தாய்க்கு, பட்டு, தாலி பொட்டு, மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட மங்கலப் பொருட்களை சீராக கொடுப்பார்.
இன்னாளில் காவேரியில் நீராடி தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு கனிகள் காப்பரிசியும் படைத்து அ வளை வழிபட்டு மஞ்சள் குங்குமம் மலர் வஸ்திரம் தீபம் காதோலை கருகமணி அவளுக்கு சமர்ப்பித்து மகிழ்வார்கள்.
புதுமண தம்பதிகளுக்கு பதினெட்டாம் பெருக்கு சிறப்பானது என்பதால் காவிரிக்கரையில் தாலி பெருக்கி கட்டிக்கொள்வார்கள்.
தற்போதைய காலகட்டத்தின் சூழ்நிலை காரணமாக நம் வீட்டிலேயே பூஜையறையில் ஒரு செம்பிலோ, சிறு குடத்திலோ புனித நீர் நிரப்பி மஞ்சள் தூள் கலந்து மஞ்சளிலே பிள்ளையார் பிடித்து வைத்து, எலுமிச்சம் பழம் வெற்றிலை பாக்கு பழம், காதோலை கருகமணி மஞ்சள் தடவிய நூலையும் இத்துடன் வைத்து மற்றும் தேங்காய் பழங்களை காப்பரிசி இவற்றைப் படைத்து மகிழ்ந்து காவேரித் தாயின் அருள் பெற்று உய்யலாம்.
லோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய மாமுனிவரை உபாசிக்கும் எளிய மந்திரம்:
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்திய மஹரிஷிப்யோ நம:
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...