Monday, August 2, 2021

ஈழத்தமிழர் பற்றிய கருத்து.

 வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவை திட்டுபவர்கள் யார்? என்று ஒரு கேள்வி எழுகிறது.

இது பற்றி என் இரண்டு காசு சிந்தனை !
இந்தியாவில் இது சரியில்லை! அது சரியில்லை! என்று விமர்சிக்கும் வெளிநாடுகளில் குடியேறிய முதலாம் தலைமுறை இந்தியர்கள் 100% பேர் நிச்சயமாக தன் ஆதங்கத்தையே வெளிப்படுத்துகின்றனர்.
காரணம் இவர்களுக்கு தன் நினைவுகள், உறவுகள், ரத்த பந்தம் எல்லாம் இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறது. அதைப் பற்றிதான் மீண்டும் மீண்டும் சிந்தனை செல்கிறது.
அதன் பலன் தான் இப்போது இருக்கும் இடத்தையும் இந்தியாவை பற்றியும் ஒப்பீடு ஓடிக் கொண்டே இருக்கிறது. தன் நாடு இருந்திருக்க வேண்டிய உயரம் இவர்களுக்கு இந்தியாவை விட்டு வெளியே வந்த பிறகு இன்னமும் புரிகிறது. ஒரு கோவிலின் உள்ளே இருக்கும் போது அந்த கோவிலின் கோபுர உயரம் தெரியாது.
இவர்கள் ஒன்று மோடி ஒயிக.. ராகுல் வாழ்க என்பார்கள். அல்லது மோடி வாழ்க.. ராகுல் ஒயிக என்பார்கள். கண்டிப்பாக கம்மிக்களை வாழ்த்த மாட்டார்கள். இவர்களை இவர்களின் புலம்பல்களை விட்டு விடுவோம். இதை புரிந்து கொள்ள முடிகிறது.
சரி.. பின் இந்தியாவை திட்டும் ஆட்கள் யார்?
நான் கண்டவரை இந்தியாவை திட்டும் கூட்டம் மத ரீதியாக இந்தியா தன் நாடு இல்லை என்று நினைப்பவர்கள். இவர்கள் வெகு காலமாக தனி நாடு கேட்டு சத்தமிடுபவர்கள்.
இதில் முதலாமவர் சீக்கியர்கள். இவர்களின் இந்திய வெறுப்பு வெகுகாலமாக உண்டு. அது இந்திராவின் OPERATION BLUE STAR க்கு பிறகு அதிகமாகி விட்டது.
இப்படி தீட்டும் சீக்கியர்களை பெயர் கொண்டு பிரித்தரிய முடியாது. இந்திய சீக்கியர்களுக்கும் இவர்களுக்கும் பெயரில் பெரிய வித்தியாசம் கிடையாது. எனவே நாம் இவர்களின் பெயரை கண்டு குழம்ப வாய்ப்பு உண்டு. இதில் காமெடி என்னவென்றால் இவர்கள் இப்பவும் திருமணம் என்றால் இந்திய சீக்கிய குடும்பத்தையே முக்கால் வாசி தெரிவு செய்கின்றனர்.
இத்தகைய வெறுப்பு குழுக்களை தேவைப் பட்ட போது அந்தந்த நாடுகள் பயன்படுத்தி வந்தன. 2001 க்கு பிறகு அப்படி ஊட்டி வளர்ப்பதன் அபாயத்தை உணர்ந்து அரசுகள் நேரடியாக இவர்களை ஊக்கு விப்பதில்லை. ஜஸ்டின் டிருடோ போன்ற சில அசடுகளை தவர!!
அடுத்து காஷமீரத்து இஸ்லாமியர்கள். இவர்களும் அமெரிக்கா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவை வசை பாடுபவர்கள். இவர்களின் கோரிக்கையும் கிட்டதட்ட சீக்கியர்களை போன்றுதான். ஆனால் இவர்களை ஓரளவு ஊட்டி வளர்க்க பாக்கிஸ்தான் தயாராக இருந்தது. இவர்கள் இந்தியாவில் யார் ஆண்டாலும் திட்டுவார்கள். இவர்களின் பெயரை கொண்டும் இவர்கள் இந்திய காஷ்மீரத்து முஸ்லீம்களா அல்லது பாக்கிஸ்தான் காஷமீரத்து முஸ்லீம்களா என்று அறிய முடியாது.
இதிலும் காமெடி என்னவென்றால் இந்த பாக்கிஸ்தான் காஷமீரத்து முஸ்லீம்களுக்கு குறைந்த பட்ச கோரிக்கை இந்தியாவிலாவது இருந்திருக்கலாம் என்பதுதா ன்!!
மூன்றாவதுதான் கொஞ்சம் குளறுபடி!
இவர்கள் மதரீதியாக இந்தியாவை திட்டுவதில்லை!
இது இலங்கை தமிழர்கள் கூட்டம். இவர்களின் சோகத்தை குறைத்த மதிப்பிட கூடாது. ஜெயவர்த்தனா ராஜபக்ஷே கூட்டம் வட இலங்கையில் செய்த அநியாயம் இவர்களின் மாறாத வடு!
இவர்களின் மொழி தமிழாக இருந்தாலும் இவர்கள் கலாசாரம் சற்றே மாறுபட்டது. அதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களுக்கு தம் சொந்த நாடு கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தவரை இந்திய பிரச்சனைகளில் பெரிய ஆர்வம் காட்டவில்லை!
ஆனால் 2009 ல் அவர்களின் கனவு சிதைக்கப் பட்ட போது கோபம் இந்தியா தம்மை கை விட்டதே என்று திரும்புகிறது.
காங்கிரசும், திமுக வும் கை விட்டதே என்று இவர்கள் நினைக்க வில்லை! இந்தியா கை விட்டது என்றே நம்புகின்றனர்.
எனவே இவர்கள் இந்தியாவை திட்டி தீரக்கின்றனர்.
இவர்களின் பெயரை கொண்டும் இவர்கள் இந்திய தமிழர்களா இலங்கை தமிழர்களா என்று உடனே அடையாளப் படுத்த முடியாது. கொஞ்சம் கூர்ந்து காண வேண்டும்.
இன்று இவர்களின் பின் ஒளிந்து கொண்டு அல்லது இவர்களின் குரல் போலவே இந்தியாவில் பிரிவினை தேடும் சிறு திராவிட /தமிழ் மிஷினெறி கூட்டமும் ஒலிக்கிறது.
இதில் காமெடி என்னவென்றால் இந்தியாவை திட்டும் இந்திய தமிழர்கள் அனைவரும் இந்தியாவில் தான் இருக்கின்றனர். இவர்கள் ஈழத்தமிழரின் பின்னால் ஒளிந்து கொண்டு மே 17 ஜீன் 27 என்று பலகை தாங்கி அழைக்கின்றனர்.
இலங்கை தமிழரின் இந்திய கோபம் அடுத்த தலைமுறைக்கு கடத்த முயல்கின்றனர். ஆனால் அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகிறது. வெளிநாட்டில் வாழும் இரண்டாம் மூன்றாம் தலைமுறை ஈழத்தமிழர்கள் இந்தியா பற்றி சிந்திப்பதில்லை!!
ஆகவே வெளிநாட்டில் ஒலிக்கும் இந்திய துவேஷ கூச்சல் எல்லாம் இந்திய குடியேறிகளிடம் இருந்து வருவதாக நினைக்காதீர்கள்.
நேர்மையாக வெளிநாட்டுக்கு உழைக்க சென்று குடியேறிய ஒவ்வொரு இந்தியனும் தான் வாழும் நாட்டுக்கும் துரோகம் செய்ய மாட்டான்.
ஆனால் அவன் சாகும் வரை மனதளவில் இந்தியாவை நேசிக்க மறக்க மாட்டான் !!
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...