Monday, August 2, 2021

உங்கள் குடும்பம் உறவுகளுடன் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழ......

 பிரிந்த உறவுகள் ஒன்றுசேர வேண்டும் என்றாலும் மனப்பூர்வமாக இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து வாருங்கள். நிச்சயமாக உங்களுடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஒற்றுமை இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும்.

தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லத்தை கலந்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும் . இந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் எதற்காக பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் கள் என்பதற்கான உள் அர்த்தத்தையும் தெரிந்து கொள்வோமா.
பொதுவாகவே பச்சரிசிக்கும் வெல்லத்திற்கும் நினைவூட்ட கூடிய சக்தி அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த பச்சரிசியை யும் வெள்ளத்தையும் பசுமாடு என்று மட்டும் கிடையாது. பசுமாடு தவிர நீங்கள் வேறு எந்த ஜீவராசிக்கும் சாப்பிடுவதற்காக உணவாக கொடுத்தாலும், அந்த ஜீவராசி உங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ளும்.
எடுத்துக்காட்டிற்கு ஆடு கோழி பூனை இப்படி எந்த உயிரினத்திற்க்கு நீங்கள் உங்கள் கையால் இந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் கொடுத்தீர்கள் என்றால், அந்த உயிரினும் உங்களை என்றைக்குமே மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுமாம்.
உங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து நீங்கள் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பசுமாட்டிற்கு கொடுக்கும் போது, அந்த பசுமாட்டில் வசிக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியும் விஷ்ணு பகவானும் இன்னும் எல்லா தெய்வ சக்திகளும் உங்களை நினைவில் வைத்துக் கொண்டு, உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும்
உங்களுக்கு இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் முழுமனதோடு எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வெல்லத்தையும் பச்சரிசியையும் கலந்து பசுமாட்டிற்கு கொடுக்கலாம். உங்கள் குடும்பம், உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளிலும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...