ஐயப்பன் ஞானத்தை வழங்க கூடியவர்..ஆயுளை நீடித்து தர வல்லவர்...48 நாள் விரதம் அதுவும் குளிர்காலத்தில் என்பது மன வைராக்கியம் இருப்பவருக்கே சாத்தியம்...அப்படி விரதம் இருந்து வழிபடும் போது உங்களுடைய பல அஷ்டம சனி,ஜென்ம சனி கண்டங்கள், தோசங்கள் தொலைகின்றன..காரணம் அப்போது வனவாசம் போவது போல ,சந்நியாசம் வாங்குவது போல சபரிமலைக்கு போவது மிக கடினமான ஒன்றாக இருந்தது...
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, November 16, 2021
மங்களம் பொங்கும் கார்த்திகை மாத பிறப்பு (17/11/2021) இன்று.
கறுப்பு வேட்டி அணிந்து செல்வதும் காவி வேட்டி அணிந்து சாமியார் போல வீட்டில் விரதத்தில் இருக்கும்போது பல தோசங்கள் அடிபடும்..மனதில் ஆழமாக வழிபடும்போதுதான் உங்கள் பிரார்த்தனைகள் உடனே பலிக்கும்..அதற்கு கடுமையான விரதம் தான் துணை புரியும்...நெஞ்சு முட்ட சாப்பிட்டு விட்டு சாமி முன்பு நின்றால் ஏப்பம்தான் வரும்..
.48 நாட்கள் விரதம் இன்று சுருங்கி ஒருநாள் விரதம் ,மாலை என ஆகிக்கொண்டிருக்கிறது 48 நாட்கள் நீங்கள் விரதம்,இருவேளை குளிர்நீர் குளியல் என இருந்தால்தான் உங்கள் உடல்,மனம் இவற்றில் பல மாறுதல்கள் உண்டாகும்...மனம் ,உடல் உறுதியாகும்.
48 நாள் நல்ல பழக்கங்களுடன் இருந்தால் அதுவே தொடர் பழக்கமாகிவிடும்.இதற்குதான் ஒரு மண்டல விரதம்.அரை மண்டலம் கால் மண்டல விரதம் எல்லாம் இப்ப வந்திருச்சு....அதெல்லாம் பலன் இல்லை...
குடியை விட்டு விரதம் இருந்து, அதன் பின் குடிக்காதவர்கள் பலர் உண்டு..ஐயப்பன் சிவன்,விஷ்ணு இருவரின் அம்சம்.....ஐயப்பன் சிலையை நிறுவியவர் விஷ்ணுவின் அவதாரமாகிய பரசுராமர்...12 வயதில் உலக நன்மைக்காக காட்டில் தவக்கோலத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தவர் ஐயப்பன்..அவர் 18 சித்தர்களின் நண்பர்...சித்தர்களுடன் அவர் உரையாடும் இடம் இன்றும் சித்ரகூடம் என அழைக்கப்படுகிறது!!
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment