பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்...
நிகழும் மங்களகராமன ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம்: 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்ரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். குருவின் பலம்:குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது.
குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
குருவால் ஏற்படும் பாக்கியங்கள்: பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.
ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள். ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.
அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.
மிதுனம் - சிம்மம் - துலாம்,
மேஷம் - ரிஷபம் - வ்ருச்சிகம் - மகரம் - கும்பம்
கடகம் - கன்னி - தனுசு - மீனம்
கடகம் ராசிக்கான பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
தனுசு ராசிக்கான பரிகாரம்: சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
கன்னி ராசிக்கான பரிகாரம்: வாராகி தேவியை சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.
மீனம் ராசிக்கான பரிகாரம் : சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை.
வாழ்க வளமுடன்...

No comments:
Post a Comment