பாஜவில், இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது" : வை கோ.
மதிமுகவில், இப்போது வந்து சேர்ந்திருக்கின்ற துரை வைகோ, முதலில் வெறும் 'சிகரெட் கடை' வைத்து கொண்டிருந்தார். அவருக்கு வை கோ வை நம்பி தி மு கவை விட்டு வெளியேறி உயிர் நீத்தவர்களுக்கு அவர் செய்த துரோகம் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு துரோக அரசியல் தெரியாது. தமிழினத்தை கொன்று குவித்த தி மு க என்று கூறிவிட்டு ஒரு எம் பி பதவிக்காக அதே தி மு கவிடம் கட்சியை அடகு வைத்த கேவல அரசியல் வை கோ வுக்கு தெரியும்.ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. 'வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு ஓட்டு அரசியலுக்காக எதிர்கால முதல்வரே என்று ஸ்டாலினை அழைத்த சந்தர்ப்பவாத அரசியல் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. வாயை மூடி மௌனம் காக்க வேண்டியது வைகோ தானேயன்றி அண்ணாமலை அல்ல. பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது.

No comments:
Post a Comment