கண்டிப்பாகப் படிக்க வேண்டும்..!
ஏடிஎம் பயன்படுத்துவோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!
என்னதான் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்தாலும் சில நேரங்களில் ஏதேனும் கோளாரால் பரிவர்த்தனை தோல்வியில் முடிவது என்பது இயல்பு, அது மட்டும் இல்லாமல் சில முக்கியமான நேரங்களில் தோல்வி அடையும்போது நாம் அடையும் துன்பம் அதிகம்.
மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி வரும் வேளையில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியின் பயனாக உலகமே தொழில்நுட்ப மயமாக மாறி வருகிறது. நேரத்தையும் மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கும் பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பங்கள் நமக்கு பயனை தந்தாலும், சில மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கடந்த சில மாதங்களாக ஏடிஎம் மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கு வரும் புகார்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. பல்வேறு வழிகளில் மோசடிகளைத் தடுக்க வங்கிகள் முயன்றுவரும் நிலையில், வாடிக்கையாளர்களும் தங்களின் புத்திசாலித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு சொந்த பணத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ஏடிஎம் பயன்படுத்தும் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இங்கு காண்போம்.
கடவுச்சொல்லை மறந்து விடுவோமோ என்ற பயத்தில் பலரும் ஏடிஎம் கடவு எண்ணை, ஏடிஎம் அட்டையில் எழுதி வைப்பார்கள், ஆனால் அவ்வாறு எழுதி வைக்கக்கூடாது.
நம்மில் பலருக்கு ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த தெரியாது, அப்படிப்பட்ட நிலைமையில் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் உங்கள் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த கொடுக்கக்கூடாது மற்றும் உங்களுக்கு உதவிபுரிய அனுமதிக்க வேண்டாம்.
வங்கி ஊழியர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை தவிர அறிமுகமில்லாதவர்கள் யாரிடமும், ஏடிஎம் கடவு எண்ணை கூற கூடாது.
ஏடிஎம் மெஷினில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, உங்கள் ஏடிஎம் அட்டையை உங்கள் கையிலே வைத்துக் கொள்ளுங்கள், பணம் எண்ணுவதற்காக கீழே வைத்து விட்டு மறதியில் சென்றவர்களும் இருக்கிறார்கள்.
அதே போல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது மொபைல் போனில் பேசுவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். கடவுச்சொல் உள்ளீடும் போது யாரையும் பார்க்க அனுமதிக்கக்கூடாது.
பரிவர்த்தனைகளைச் செய்து முடித்த பின்னர், ஏடிஎம் திரையில், வரவேற்றுத் திரை உள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
ஏடிஎம்-ல் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் அறிமுகமில்லாத நபர்கள் உரையாட முயற்சிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான வகையில் ஏடிஎம்-ல் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.
ஏடிஎம் இயந்திரம் பணம் இல்லாத நிலையிலும், பணம் இல்லை எனத் திரையில் தெரிவிக்கவில்லை எனில், அங்குள்ள தகவல் பலகையில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு வங்கிக்குத் தகவல் தெரிவியுங்கள்.
பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது எனக் குறுஞ்செய்தியை சரிபாருங்கள்.
வங்கி பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்திகள் மற்றும் வங்கி அறிக்கைகலையும் தொடர்ந்து சரிபார்க்கவும்.
உங்களின் தற்போதைய கைப்பேசி எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். அதன் மூலம் உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் அறிவிக்கை குறுஞ்செய்திகள் பெறமுடியும்.
உங்களின் ஏடிஎம், டெபிட் அட்டை தொலைந்து போனாலோ அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடக்கும் போது, உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அசாதாரணத்தால் கஷ்டப்பட்டு சேமித்த தொகையை #கைவிட்டு விடாதீர்கள்..!

No comments:
Post a Comment