“புலப்பாக்க சுசீலா” என்னும் இயற்பெயர்கொண்ட பி. சுசீலா அவர்கள், 1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள “விஜயநகரம்” என்ற இடத்தில், தந்தையார் ‘புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம்’, என்பவருக்கும், தாயார் ‘ஷேசாவதாரம்’ என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். இவருடைய தந்தை ஒரு வக்கீலாக பணியாற்றி வந்தார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, November 12, 2021
பி. சுசீலா.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய சொந்த ஊரிலியே பள்ளிப்படிப்பை முடித்த அவர், படிக்கும் பொழுதே இசையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆந்திராவில் புகழ்பெற்று விளங்கிய ‘துவாரம் வேங்கடசாமி நாயுடுவிடம்’ முறையாக இசைப் பயின்றுவந்தார். அதன் பிறகு, ‘சென்னை மகாராஜா இசைக்கல்லூரியில்’ சேர்ந்து, இசைக் கல்வி பயின்ற அவர் பின்னர், ‘ஆந்திரா பல்கலைக்கழகத்தில்’ சேர்ந்து இசைத்துறையில் ‘டிப்ளமோ’ முடித்தார்.
இசைப்பயணம்
இளம்வயதிலேயே குறுகியகாலத்திற்குள் பாரம்பரிய இசையில் தேர்ச்சிப்பெற்றவராக விளங்கிய அவர், ஆரம்பத்தில் சென்னை வானொலியில் ‘பாப்பா மலர் நிகழ்ச்சியில்’ பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குனர் ‘கே.எஸ் பிரகாஷ்ராவ்’ அவர்கள், தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பின்னணிக் குரல் பாட வைத்தார். 1953 ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் ‘ஏ.எம் ராஜாவுடன்’ இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்றப் பாடலைப்பாடினார். பிறகு ‘ஏ.வி.எம் ஸ்டுடியோவில்’ சிறிது காலம் பணியாற்றிய அவர், ‘லஷ்மிநாராயணம்’ என்பவரிடமிருந்து மேலும் தமிழ் கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற திரைப்படத்தில் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடல்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதே ஆண்டில் ‘எஸ்.வி பிரசாத்’ இயக்கத்தில் வெளிவந்த ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் இவர் பாடிய இரண்டு பாடல்கள் மேலும் புகழைப் பெற்றுத்தந்தது.
தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ் கற்றப்பிறகு, அவர் உச்சரிப்பில் உதிர்ந்த அனைத்துப் பாடல்களும் கேட்பவர் மனதில் ஒரு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். 1955 ஆம் ஆண்டுக்கு பிறகு, தன்னுடைய தேன் குரலால் தமிழ் இசை நெஞ்சங்களின் மனதை உருகவைத்த அவர், தொடர்ந்து பலப் பாடல்களை பாடினார். குறிப்பாக ‘ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘சிட்டுக்குருவி முத்தம்’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘மன்னவனே அழலாமா’, ‘பேசுவது கிளியா’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘வளர்ந்த கலை’, ‘அனுபவம் புதுமை’, ‘தாமரை கன்னங்கள்’, ‘மறைந்திருந்துப் பார்க்கும்’ போன்ற பலப் பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் ஆலயமணியாய் ஒலித்தன. அமுதக்குரலில் ‘தமிழ் மொழியைப்’ பற்றி அவர் பாடிய ‘தமிழுக்கும் அமுதென்றுப் பேர்’ என்ற பாடல் தமிழ் பிரியர்களின் மனதை அமுத மழையால் நனைத்தது.
நாகேஸ்வரராவ்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘எம். எஸ். விஸ்வநாதன்’ என்று அன்றைய இசையமைப்பாளர்களில் தொடங்கி, ‘இசைஞானி இளையராஜா’, ‘ஏ.ஆர் ரகுமான்’ என மேலும் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’, ‘சிங்களம்’ எனப் பல இந்திய மொழிகளில் பாடி, இசைத் துறைக்கு அரியதோர் பங்காற்றி உள்ளார். இசைத் துறையில் 60 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மாபெரும் சாதனைப் படைத்து வரும் சுசீலா அவர்கள், தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, இசைப் பணியாற்றி வருவதோடு மட்டுமல்லாமல், தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி, கௌரவித்து வருகிறார்
குழுவின் சார்பில் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment