Sunday, November 14, 2021

இனித்த_விளம்பரமும்_கசந்த_பண்பாடும்..!!!

 #பழமையை_வெறுப்பவர்களுக்கானபதிவு.

படத்தில் உள்ள பொருட்கள் இன்று வீடுகளில் #நாகரீகபோக்கால் காணாமல் போவதோடு, இன்றைய நவீன இல்லத்தரசிகள், அதனை மறந்தே போயினர், என்பது வேதனையே...
ஆனால் இப்பொருட்கள் ஆன்லைனில் சக்கைப்போடு போட்டுக்கொண்டு ஜோராக விற்பனையில் இறங்கிவிட்டது..
வெகுஜன மக்கள் சொற்ப விலையில் கிடைத்த இந்த ஆட்டுக்கற்கள் மற்றும் அம்மிக்கல் இன்று நவீனம் என்ற பெயரில், தூசி தட்டி திரும்ப நம்மிடமே போட்டிபோட்டுக்கொண்டு, விற்பனை செய்கின்றனர்..
உடலை வருத்தி சமையல் பொருட்களை ஆயத்தம் செய்து வந்த நாம் இரும்பு இயந்திரங்களால் அரைக்கப்பட்டு கார்பரேட் கம்பெனிகளால் தயாரித்து விற்கப்படும் பொருட்களை வாங்கி உண்ண ஆரம்பித்து விட்டோம்.
இரும்பினால் அரைக்கப்படும் போது உண்டாகும் மிகுந்த சூட்டினால் கற்களானது தூளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறது..அந்த தூள்கள் உடலுக்கு நல்லதல்ல.
மேலும் மிளகாய் தனியா மஞ்சள் தூள்களில் கலப்படம் செய்யும் பொருட்களின் பெயர்களை தெரிவித்த போது மக்கள் எம்மை நம்பவில்லை.
#அம்மிக்கல்_ஆட்டுக்கல் சிறந்த உடற்பயிற்சி தரக்கூடியது. அதுவும் இன்று அடுக்களையில் காணாமல் போகும், இன்றியமையா பொருளாகிப்போனது..
கலப்பட உணவு பொருட்களால் பல‌ நோய்களுக்கு மக்கள் ஆளாவது ஒரு கசப்பான உண்மை என்றால் அது மிகை‌ஆகாது.
#பழமையினை_நினைவுகூர்வதோடு எதனால் ஆரோக்கியம் விழைகிறது என்பதனையும் அறிவோம், அடுத்தவருக்கும் பகிர்வோம்..!!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...