Monday, September 5, 2022

எங்கே_போகிறோம்?

 சமீப காலமாக தமிழக அரசியலில் மட்டுமல்ல, சமூக ஊடகங்கள், பத்திரிக்கைகள், தொலைக் காட்சி விவாதங்கள் போன்றவற்றில்,

முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த குறைந்தபக்ஷ , நாகரீகங்கள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டு, தரமற்ற பரபரப்பு அரசியல் தான் நடக்கிறது.
.
எல்லா தொலைக்காட்சிகளும், பத்திரிக்கை, ஊடகங்களும் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்து செயல்படுகிறது என்பதை விட,
பாஜக, மோதி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கைக் கொண்டுள்ளது, என்பதே சரியாக இருக்கும். இதற்கு, பல உள் நோக்கங்கள் இருந்தாலும், முக்கியமாக பாஜக கொள்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், கல்வித் தந்தைகள், மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள், தங்கள்
அமைப்பு ரீதியான, மத, ஜாதி ரீதியான குழுக்கள் மூலமாக, ஊடகங்களைக் கையகப்படுத்தி
தங்கள் வெறுப்பை பரப்புகின்றன.
.
நெறியாளர்கள் விவாதங்களை நடத்தும் விதம், பட்டவர்த்தனமாக அவர்களின் எஜமான விஸ்வாசத்தைக் காட்டுவதாகவே உள்ளது. இதில், கவர்னர்- அரசு கொள்கை மோதல், ஏதோ இரு பரம விரோதிகளின் சண்டை போன்றும் , அரசின் நிலைப்பாடு சரி எனபது போன்றும் தோற்றுவிக்க முயல்கின்றன.
.
முக்கியமான விஷயம் என்னவென்றால், முன்பிருந்த தலைவர்கள் விஷயம் அறிந்து, அதை எப்படி, ஆதரிப்பதா,எதிர்ப்பதா என்று ஆழ தீர்மானித்து முடிவெடுத்து, அதை கட்சித் தலைவரின் குரலாக ஒன்றாக வெளிப்படுத்துவார்கள்.
இப்போது ஆளுமையற்ற தலைவர்களின்
முடிவெடுக்கும் திறமையின்மையும் அவர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலையும், எந்த விஷயத்திலும் குழப்பம் தான். அவரவர் ஒவ்வொரு கருத்தைக் கூறுவதும், அது ப்ரச்னையானால், தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதும் நடக்கிறது.
கட்சித் தலைவர்களும், இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் விலகி நிற்கிறார்கள்.
.
இந்த நிலையில் திமுக-பாஜக மோதலும், தமிழகத்தில் முன்பு எப்போதும் இருந்திராத அளவு
பரபரப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. திமுகவின் முந்தைய காலத்து அராஜக அரசியலின் சுவை அறிந்தவர்கள் அந்த வழியை தேர்ந்தெடுத்து மோத,
வெற்றிகொண்டான், தீப்பொறி போன்ற பேச்சாளர்கள் இல்லாத குறையை மெத்தப் படித்தவர்களே கையிலெடுத்துக் கொண்டார்கள்.
.
"நீ எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை உன் எதிரி தான் தீர்மானிக்கிறான்" என்பது போல,
திமுக எடுத்த ஆயுதத்திற்கு பதில் ஆயுதம், பாஜக எடுத்துள்ளது.
1970', 80, 90 களில் இருந்த திமுக அராஜகத்திற்கு பயந்து அடங்கிப் போகும் நிலை இப்போது இல்லை.
இல. கணேசன், பொன்னார் போன்ற
சாத்வீகமானவர்கள் என்ற போர்வையில் ஒதுங்கிப் போன காலம் இல்லை இப்போது.
.
ஊடகங்களை தன் கட்டுக்குள் வெகு காலம் திமுக வைத்திருக்க முடியாது.
அப்படியே வைத்திருந்தாலும், சமூக ஊடகங்கள் , Whatsapp, Youtube, twitter, instagram, facebook போன்றவற்றில் உண்மைகள் வெளி வந்து, பொய்களை அம்பலப்படுத்தி விடுகின்றன. மக்கள் , முழு விழிப்போடு இருக்கின்றனர்.
திமுகவின் ஊழல்கள், அராஜகங்கள்
ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
.
ஆனால், திமுக பத்தாண்டுகள் பதவியில் இல்லாமல், இப்போது பதவிக்கு வந்ததும், தாங்கள் நினைத்தபடி சம்பாதிக்க இயலாத நிலைதான் உள்ளது. இதனால் ஏற்படும் எரிச்சலும், கோபமும் தான்
தரமற்ற கருத்துக்களின் அடிப்படை.
..
இதில் படித்த, மெத்தப்படித்த மேதாவி அமைச்சர்களின் கருத்துக்களும், அவர்களின் பேச்சும், உடல்மொழியும் முகம் சுளிக்க வைக்கிறது. இவர்களைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில், அல்லது கட்டுப்படுத்தி வைக்க விரும்பாத நிலையில் முதல்வர் இருப்பது பட்டவர்த்தனம். நியாயமான எதிர்த்தரப்பினரின் குரலை, காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு அடக்கிவிட எண்ணுகிறது. மாரிதாஸ், கிஷோர் கே சாமி, கனல் கண்ணன், போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, ஆங்கிலேய அடக்குமுறை போல் உள்ளது.
அதே சமயம், இந்து எதிர்ப்பாளர்கள்,
திராவிட சிந்தனையாளர்கள் இந்து மதத்தின் மீதும், இந்துக்கடவுள்கள் மீதும் எத்தனை தரக் குறைவாகப் பேசினாலும் நடவடிக்கை இல்லை..
மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதாகக் கூறி மக்களின் எதிர்கால முன்னேற்றத்தைத் தடுப்பதும், மத்திய அரசை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், திமுக எந்தக் காலத்திலும், தன்னை மாற்றிக் கொள்ளாது என்பதை நிரூபிக்கிறது.
இந்நிலையில், தமிழக பாஜக, மாநிலத் தலைவர் , ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படை
மரியாதை கூட இல்லாமல், ஆடு படம் போட்டு விமர்சிக்கும் மெத்தப்படித்த மேதாவி அமைச்சருக்கு, அண்ணாமலை தந்த பதில் நல்ல
சூடு தான்.
.இதை திமுக எதிர்பார்த்திருக்காது. இப்போதே இப்படி என்றால், பாராளுமன்றத் தேர்தல் 2024, சட்டமன்றத் தேர்தல், நேரங்களில் விமர்சனம்-எதிர் விமர்சனங்களில் அனல் பறக்கும் என்பதை விட சேறு, சாணி வீசல்கள் தான் அதிகம் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எப்போதும், நாகரீகம் என்பது திமுக மறந்துவிட்ட ஒரு விஷயம். அது எதிர் அணியினருக்கு மட்டுமான ஒருவழிப் பாதை என்பது
தமிழகத்தில் எழுதாத சட்டம். இனி அப்படி இருக்காது, என்பதை அண்ணாமலை, திமுகவுக்கு உணர்த்தி விட்டார்.
.
இருந்தாலும் தேசிய அளவில் மோதி, அமீத்ஷா, போன்ற தலைவர்களும் இப்படிப்பட்ட சம்பவங்களை எதிர் கொண்டதுண்டு. அவர்கள் சந்திக்காத எதிர்ப்புகள் இல்லை.
ஆனால், அவர்கள், தங்கள் செயல்களில் எதிரிகளுக்குப் பாடம் புகட்டுகின்றனர். இதையே படித்த, பாஜகவின் சிறப்பான எதிர்காலத்தை விரும்பும் ஆர்வலர்கள் அண்ணாமலை அவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
.
சரவெடி உணர்ச்சி மேலீட்டில், மகிழ்ச்சி கொள்ளும் மக்களை ஆனந்தப்படுத்தும். ஆயினும், சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பு அதுவல்ல.
.
தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும்.
அது இப்படித்தானா??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...