செய்ய முடியும் உங்களால்.?*
*ஒன்றை நினைவில் வையுங்கள்..... உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து?*
*தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வர முடியுமா?*
*சரி!*
*இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?*
*CBSE கல்லூரியிலா?*
*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?*
*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான், இல்லையா?*
*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*
*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?*
*இல்லை!*
*இல்லவேஇல்லை!*
*இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?*
*பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவில்லையா ?*
*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?*
*உங்கள் பிள்ளை சாதனையாளனா?*
*இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?*
*உங்களுக்குத் தெரியுமா.....*
*TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?*
*TET தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?*
*இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?*
*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?*
*உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?*
*அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?*
*இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள் அன்புப் பெற்றோர்களே?*
*அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?*
*வாருங்கள் குரல் கொடுப்போம்..... அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் (உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் கடைநிலை அலுவலக ஊழியர்களின் பிள்ளைகள் வரை) அரசுப்பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றக் குரல் கொடுப்போம்.*
*அப்படிச் சட்டம் இயற்றுவார்களா?*
*இயற்றினால் என்ன நடக்கும்?*
*அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடனும், ஆட்சியர் (கலெக்டர்) மகனுடனும் நம் பிள்ளைகளும் படிப்பார்கள்.*
*கட்டிட வசதிகள் அதிகமாகும்.*
*புதிய முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும்.*
*நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்காலத்திற்காகபணம் சேமிக்கப்படும்.*
*சிந்திப்போம்!*
*மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!*
No comments:
Post a Comment