இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. இந்த நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. - மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். - பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். - ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. - செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment