Thursday, May 4, 2023

நீங்கள் சொல்வது கீழ்மட்டத்தில் உள்ளவர்களை குறிப்பிடுகிறீர்கள் .

 நீதிபதி : உங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுக்கு வாதாட யாராவது வழக்கறிஞர் இருக்கிறார்களா

குற்றவாளி : இல்லை நீதி அரசர் அவர்களே நான் குற்றவாளி இல்லை என்பதை நிறுபிக்க நானே வாதடலாம் இல்லையா
நீதிபதி : கண்டிப்பாக உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது
குற்றவாளி : நானே வாதிடுகிறேன்
என்ன குற்றம் செய்தேன் சொல்லுங்கள்
நீதிபதி : நீங்கள் இந்திய
மாற்று திரனாளிகள் கிரிக்கெட் குழுவின் கேப்டன் என்றும் பலநாடுகளுக்கு பாஸ்போர்டே இல்லாமல் சென்று விளையாடி
கோப்பை வென்றுள்ளதாக கூறி பலபேரிடம் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்ட பட்டுள்ளீர் அது உண்மை தானா
குற்றவாளி : நீங்கள் என்மேல் சொல்லும் குற்றத்தை ஏற்றுகொள்வதற்கு முன் இந்தாங்க இந்த போட்டோவை பாருங்கள்
நீதிபதி : இந்த போட்டோவில் முதலைமைச்சர் இருக்கிறார் அமைச்சர் இருக்கிறார் மற்றொருவர் இருக்கிறார் நீங்கள் கோப்பையோடு இருக்கிறீர்கள்
இதை தானே மோசடி என்று வழக்கு வந்திருக்கிறது
குற்றவாளி : இதைத்தான் நானும் சொல்கிறேன் நான் மோசடி செய்தேன் என்றால் முதல்வர் எப்படி அனுமதித்து இருப்பார்
அவரிடம் காவல்துறை இருக்கிறது உளவுதுறை இருக்கிறது அறிஞர்கள் குழு இருக்கிறது அமைச்சர்கள் குழு இருக்கிறது அவர்கள் எல்லோரும் நான் சொல்வது உண்மை என்றதால் தானே
என்னை அழைத்து பாராட்டி போட்டோவும் எடுத்து விளம்பர படுத்தினார்கள்
பிறகு இவர்கள் எப்படி என்னை மோசடி செய்தவன் என்று குற்றம் சாட்ட முடியும்
நீதிபதி : நீங்கள் மாற்று திரனாளி என்பதால் ஒரு இறக்கம் வந்திருக்கலாம் அல்லவா
குற்றவாளி : நீங்கள் சொல்வது கீழ்மட்டத்தில் உள்ளவர்களை குறிப்பிடுகிறீர்கள்
நான் சொல்வது உச்சியில் இருக்கும் முதல்வரை பற்றி அவர் ஒரு விளம்பர பிரியர் அவர் நாட்டை கவனிக்க மாட்டார் நாட்டில் போதை கலாச்சாம் லஞ்சம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது கொலை கொள்ளை எதையும் கண்டுகொள்ள மாட்டார் அவருக்கு தேவை விளம்பரம் இந்தமாதிரி ஒன்றுத்திற்கும் புரோஜனம் இல்லாத முதல்வரை எப்படி மக்கள் முன் தெரிவிப்பது இவர் ஒரு உதவாகரை முதல்வர் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக பாடுபட்டேன் அதில் வெற்றியும் அடைந்தேன் இதில் என்ன தவறு இருக்கிறது நாட்டு மக்களுக்கு நல்லதைதான் செய்தேன்
நீதிபதி : முதல்வர் ஒரு விளம்பர பிரியர் என்றும் எந்தவித அறிவாற்றல் இல்லாதவர் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்
குற்றவாளி : ஒன்றா இரண்டா சுறுக்கமாக ஒரு இரண்டு மூன்று விஷயத்தை சொல்கிறேன்
கொரானா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி போட்டு உலக சாதனை படைத்தது மத்திய அரசு
அதை ஸ்டாலின் போட்டதுபோல் விளம்பரம் படுத்தியது ஒரு பக்கம் ஸ்டாலின் போட்டோ மறுபக்கம் கருணாநிதி போட்டோ
ரஷ்யா உக்ரைன் போர் வந்தபோது மத்திய அரசு 21 ஆயிரம் இந்தியர்களை மட்டுமின்றி சில வெளி நாட்டவரையும் காப்பாற்றி மீட்டு கொண்டு வந்தது அப்படி மீட்க பட்டவர்களில் தமிழர்களை மட்டும் பிரித்து டில்லியில் இருந்து சென்னை கொண்டு வந்த ஸ்டாலின் அரசு நாங்கள் தான் காப்பாற்றி கொண்டு வந்தது போல் ஒரு விளம்பரம் தந்தது
ஏன் ரொம்ப போகிறீர்கள் சூடான் கலவரத்தில் கூட ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் மத்திய அரசு இந்தியர்களை காப்பாற்றி அழைத்து வந்தது
அதற்கும் இவர்கள் விளம்பரம் தேடினார்கள் நீதி அரசர் அவர்களே
அடுத்து என்ன கேட்டீர்கள் அறிவாற்றல் இல்லாத முதல்வர் அதை நீங்கள் என் விஷயத்திலேயே தெரிந்திருக்கலாமே இதற்கு விளக்கம் வேற தேவையா நீதி அரசர் அவர்களே
நீதிபதி : அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்
குற்றவாளி : இவர்களுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை இவர்கள் மக்களை விளம்பரத்தால் ஏமாற்றுகிறார்கள் என்பதை மக்களுக்கு புரியவைக்க தான் நானும் இதை செய்தேன் என் வியூகம் உண்மையானது அதில் வீழ்ந்தார் முதல்வர் விளம்பரம் என்றால் எதையும் கண்கொள்ளா மாட்டார்கள் தொப்பு தொப்பு என்று வந்து விழுவார்கள்
நீதிபதி : அது விசாரணைக்கு உறியது இதற்கு வாருங்கள் அரசியல் அல்லாதவர்களையும் தனி பட்டவர்களையும் மோசடி செய்திள்ளீர்களே அந்த குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில்
குற்றவாளி : என்னங்க நீதி அரசர் அவர்களே பத்து படிக்கு மேல தான் முதல்வர் இருக்கிறார் என்றால் அந்த பத்து படியை மிதித்தால் தானே (மிதித்து ஏறினால் ) தானே முதல்வரை பார்க்கவே முடியும் நடந்தே போக முடியாது என்னால்
நான் பறந்தா போக முடியும்
நீதிபதி : தீர்ப்பு ஒத்தி வைக்க படுகிறது
🤣🤣🤣

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...