Thursday, May 4, 2023

கல்லா பெட்டி அறிமுக காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்தது.

 திரைப்படம் -, டார்லிங்..டார்லிங்...டார்லிங்

இயக்குநர் _திரு.கே.பாக்யராஜ்.
பாக்யராஜ், பூர்ணிமா நடித்து வந்த இந்தப் படத்தை எத்தனை பேர் பாா்த்திருக்கிறீர்கள்? எனக்கு மிகவும் பிடித்த மனதைத் தொட்ட படம்.. அற்புதமான திரைக்கதை அமைந்த படம்..
பாக்யராஜின் படங்களில் கல்லாப் பெட்டி சிங்காரம் நகைச்சுவைக்கு பெரும் பலம்.. இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் தொடங்கும் அவரின் நகைச்சுவை படம் நெடுக வரும்..
அதே போல படத்தின் சின்ன வயதில் அஞ்சு _ சுரேஷ் காட்சிகள் அத்தனை அழகாக இயல்பாக வரும்..
பெரிதான பாக்யராஜ் மறக்காத சின்ன வயது ஞாபகங்களுடன் ரயில்வே ஸ்டேஷனில் போய் லிவிங்ஸ்டனை ஐந்து நிமிஷத்துக்கோரு தரம் டிரைன் எப்போது வரும் என்று அவரை அலற விடுவதிலிருந்து கிளைமாக்ஸ் வரை அவரின் சாம்ராஜ்யம் தான்.. அதுவும் டிரைனில் வரும் பூர்ணிமாவுக்காக டிப்டாப்பாக டிரஸ் பண்ணிக் கொண்டு போய் அவர் அலட்சியமாக லக்கேஜ் எடுத்துக்கங்க என்பாரே?! அப்போது முகத்தில் காண்பிப்பாரே ஒரு பாவம்.. அது பாக்யராஜால் மட்டுமே முடியும்..
அப்புறம் பூர்ணிமாவிடம் சின்ன வயது ஞாபகங்களைக் கொண்டு வர நாய்க்குட்டி புதைத்த இடத்துக்கு கூட்டிப் போய், கராத்தே போட்டு, சின்ன வயதில் இருவரும் இணைந்து எடுத்த போட்டோவில் பூர்ணிமா தனது படத்தை மட்டும் வெட்டி எடுக்கும் போது நான் நான் என்று ஆர்வத்துடன் சொல்லி ஏமாந்து அவர் தன்னைக் காதலிக்க வில்லை என்று அறிந்து அவரின் மாப்பிள்ளையான சுமனை நேசித்து மாப்பிள்ளை சாா் என்று அவர் தரும் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக பூர்ணிமா மனதில் இடம் பிடித்து, க்ளைமாக்ஸில் அவரை ( நம்மையும்) " ஙே " ன்னு முழிக்க வைப்பாரே அது வரை அவர் சாம்ராஜ்யம் தான்..
அது மட்டுமல்ல! காமெடியாக வரும் சிங்காரம் சேட்டுகிட்ட மாட்டிகிட்டு திண்டாடுவாதகட்டும், மகன் பெரிய இடத்து மாப்பிள்ளையாக போகிறான் என்று கெத்து காட்டுவதாகட்டும், தான் ஒளித்து வைத்திருக்கும் உண்டியல் காசை எடுத்து நடக்காத கல்யாணத்துக்கு தருவகாகட்டும், இந்திரா பூர்ணிமா தரும் ஜிமிக்கியை திருப்பித் தந்து விட்டு பேசும் வசனமாகட்டும்., பக்கத்து வீட்டு வாட்ச்மேனாக வரும் பாண்டியராஜன் காமெடியாகட்டும், படத்தின் ஒரு சீன் கூட நெஞ்சை விட்டு அகலாதவை..
அதே மாதிரி இசையும்.. ( சங்கர் கணேஷ்) எத்தனையோ காதல் சோகப் பாடல்கள் வந்தாலும் இதில் வரும் ஓ..நெஞ்சே பாடல் போல நெஞ்சைக் கனக்க வைக்கும் பாடல் அரிது ( இந்தப் பாட்டை இரவில் தனிமையில் கேட்டுப் பாருங்கள்.. நம்மையும் அறியாமல் ஒரு விம்மல் மனசுக்குள் வரும்)
ஒளிப்பதிவும் அழகிய விழிகளில் பாட்டில் நன்றாக இருக்கும்.. பார்க்காதவர்கள் எப்போதாவது சேனலில் ஒளிபரப்பினால் மிஸ் பண்ணாமல் பாருங்கள்..
ஒரு இடத்தில் பூர்ணிமாவிடம் மிஸ்பிஹேவ் பண்ணும் சுமனிடம் கோவித்துக் கொண்டு பாக்யராஜ் சைக்கிளில் ஏறி வரும் பூர்ணிமாவின் புடவை சைக்கிளில் சிக்கி விடும்.. அதை எடுக்க கண்ணாடி போடாத பாக்யராஜ் போராடுவாா் பாருங்க.. அற்புதமான இயக்குநர்..
நெஞ்சில் நீங்கா நினைவலைகள்பாக்யராஜ், பூர்ணிமா நடித்து வந்த இந்தப் படத்தை எத்தனை பேர் பாா்த்திருக்கிறீர்கள்? எனக்கு மிகவும் பிடித்த மனதைத் தொட்ட படம்.. அற்புதமான திரைக்கதை அமைந்த படம்..

நெஞ்சில் நீங்கா நினைவலைகள்.
May be an image of 3 people, people smiling and text
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...