Thursday, May 4, 2023

தேசம் நல்லவர்களால் உருவாக்கப்பட்டு நாம் அனுபவிக்கிறோம்.

 1973-ல் நடிகர் திலகம் நடித்த 'ராஜபார்ட் ரங்கதுரை' படம் வெளியிட தயாரானதும், வெளியிடும் முன்பாக அப்படத்தை பெருந்தலைவர் காமராஜருக்கு திரையிட்டுக் காட்ட விரும்பினார் அப்படத்தின் தயாரிப்பாளரான வி.சி.குகநாதன். அதற்கு பெருந்தலைவரும் ஒப்புதல் அளித்து, சென்னை பிலிம்சேம்பர் அரங்கில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

பெருந்தலைவருடன் ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர்களான குமரி அனந்தன், எஸ்.ஜி.விநாயக மூர்த்தி, என்.எம்.மணிவர்மா, என்.எஸ்.வி. சித்தன் மற்றும் கவிஞர் கண்ணதாசன் , சோ, எழுத்தாளர்கள் சாவி, தமிழ்வாணன், ஜெயகாந்தன், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை உட்பட பல முக்கியஸ்தர்களும் ராஜபார்ட் ரங்கதுரை படத்தை கண்டு ரசித்தனர். பதிவு மற்றும் நிழற்படம் முகம்மது தமீம். இறுதியில் கொடி காத்த குமரன் வேடத்தில், கையில் கங்கிரஸ் கொடியுடன், ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் முழக்கங்களுடன் ரங்கதுரை மரணிக்கும் காட்சியில் பெருந்தலைவர் கண் கலங்கினாராம்.
படம் முடிந்ததும் தயாரிப்பாளர் வி.சி.குகநாதனை அருகில் அழைத்த பெருந்தலைவர், " படம் நல்லாயிருக்கு. இதே மாதிரி தேசியத்தை வலியுறுத்தும் நல்ல படங்களாக எடுங்க" என்று வாழ்த்தினாராம்.
(அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட இந்த நிழற்படத்தில் பெருந்தலைவர், நடிகர் திலகம், சின்ன அண்ணாமலை ஆகியோர்).
May be an image of 2 people and flute
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...