சொன்னா கோபித்துக் கொள்ளக் கூடாது. இந்த செந்தில் மர மண்டையில் ஆணி அடித்தாற்போல் ஆழமாய் பதிந்து இருக்கும் ஒரே உறவு மனைவி தாங்க.
நல்ல சட்டையை மிகுத்த அழுக்காக்கி வீட்டுக்கு வந்தால்.. ஏன்டா எருமை மாடு இப்படியா சட்டையை அழுக்காக்குவது என்று எனது அம்மா திட்டி இருக்கிறார். ஆனால் மனைவி_ ஏங்க இப்படி?…என்ன ஆச்சு?..என்றுதான் கேட்பார். வீட்டுக்குள் நின்று ஜன்னல் வழியாக ரோட்டின் பக்கமாக எச்சில் துப்பினால் கூட…(அப்படி நான் செய்ய மாட்டேன்) என்னங்க வர வர சின்ன பிள்ளையாட்டம்.. என்று கூறிக்கொண்டு கையில் ஈரத் துணியோடு எந்த சங்கோஜமும் இன்றி.. ஜன்னல் கம்பிகளை துடைப்பதற்கு வருவார்.
எனக்காக இவ்வளவு பொறுமையும், அன்பும்செலுத்துவதற்கு மனம் உடையவர்கள்…மனைவியைத் தவிர வேறு யார் இருக்க முடியும். அவரைத் தவிர மற்ற உறவெல்லாம் ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுவதற்கு மட்டுமே.
அம்மா எனக்கு உசத்தி தான்! அவர்தான் இப்போது என் அருகில் இல்லையே? அவருக்கடுத்து அவர் அளவிற்கு என்னை நேசிக்க இப்போது இருக்கின்ற ஒரே ஜீவன் மனைவி தானே? (பிள்ளைகள் என்பதெல்லாம் என் மனைவிக்கு அடுத்து தான்)எனவே *சிறந்த உறவு மனைவி மட்டுமே!*இதுதான் எனது ஆணித்தரமான அழுத்தமான கருத்து. யுவர் ஆனர்! நன்றி.
No comments:
Post a Comment