Friday, June 2, 2023

மரணம் குறித்த பயத்தைப் பற்றி கலீல் ஜிப்ரான்:

 கடலுக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு நதி பயத்தால் நடுங்குகிறாள். அவள் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தாள். மலை உச்சிகளில் இருந்து, காடுகளையும் கிராமங்களையும் கடக்கும் நீண்ட வளைந்த பயணம். இப்போது அவள் முன் ஒரு பெரிய கடலை பார்க்கிறாள். கடலுக்குள் நுழைந்தால் என்றென்றும் நதியாகிய தான் மறைவதைத் தவிர வேறு வழியேதுமில்லை..

ஆனால் வேறு வழியில்லை. நதி திரும்பிச் செல்ல முடியாது. யாரும் திரும்பிப் போக முடியாது. திரும்பிச் செல்வது இருப்பில் சாத்தியமற்றது. நதி இந்த அபாயமான செயலை செய்ய வேண்டும். அதாவது கடலுக்குள் நுழைவது. ஏனென்றால் அப்போதுதான் நதிக்குத் தெரியும் இது கடலில் மறைந்து போவது அல்ல, ஆனால் தானும் ஒரு கடலாக மாறுவது என்று.
அது போலத்தான், நம் வாழ்க்கை என்ற ஆறு, மரணம் என்ற கடலுடன் கலப்பதும். எனவே மரணம் குறித்து கவலை கொள்வதை விடுத்து, வாழ்க்கையை ரசித்து, பிற உயிர்களுக்கு உதவிகரமாக வாழுந்து, பிறகு மரணம் என்னும் பெரும்கடலில் பேரானந்தமாய்க் கலப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...