நாடு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட போது
நேரு அதை ஏற்றுக்கொண்டு பேசியபோது
அழைக்கப்படவில்லையே ஏன் ?
அவர் எங்கு இருந்தார்? யாராவது சொல்ல முடியுமா?
நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோல் கொடுத்த நிகழ்வில் யாராவது காந்தியினை இந்து ஆதீனங்கள் கண்டதாகவோ வாழ்த்தியதாகவோ கண்டீர்களா?
அப்படி ஒரு வரலாற்றை பார்க்க முடியுமா?
நேருவிடம் செங்கோல் கொடுத்த நிகழ்வின் போது காந்தியினை யாரும் தேடவில்லை, இந்துக்களை விடுங்கள் காங்கிரஸோ நேருவோ மவுண்ட்பேட்டனோ பட்டேலோ கூட தேடவில்லை
அந்நிகழ்வில் காந்தி இல்லை, அவர் அப்போது கல்கத்தாவில் உண்ணாவிரதத்தில் இருந்தார் என்பார்கள், ஆனால் அவர் ஆகஸ்டில் உண்ணாவிரதம் தொடங்கவில்லை, 1947 செப்டம்பரில்தான் தொடங்கினார்
அதாவது சுதந்திரம் கிடைத்த நேரம் அவர் பெரும் போராட்டம் ஏதும் செய்யவில்லை, இந்தியா உடைந்து இந்துக்களின் பெரும் அதிருப்தி வெடித்த நேரம் அவர் வெளியில் தலைகாட்டாமல் முடங்கி கிடந்தார்
பஞ்சாம், சிந்து வங்கம் பிரிந்து ஏற்பட்ட பெரும் களபேரத்தில் அவர் நொந்து போன இந்துக்களை இன்னும் வெறுப்பேற்றும் விதமாக ஏதேதோ சொல்லி பெரும் அதிருப்திக்கு ஆளானார்
அப்போதே அவர்மேல் கொலை முயற்சிகள் நடகக் தொடங்கின ஆனால் எல்லாம் மறைக்கபட்டன
பிரிட்டிசாரை அஹிம்சையால் விரட்டியவர் என சொல்லபட்ட காந்தி, ஜின்னாவிடம் மகா மோசமாக தோற்றிருந்தார் அல்லது பிரிட்டனின் காந்தி நாடகத்தின் உண்மை முகம் தெரிந்து கொண்டிருந்தது
காங்கிரசோ, மவுண்பேட்டனோ அவரை டெல்லிக்கு யாரும் அழைக்கவுமில்லை, இந்துக்கள் அவரை தேடவுமில்லை, அவரை கண்டுகொள்ளவுமில்லை
தேசபிதா என சொல்லபட்டவர் இல்லாமலே தேசத்தின் அதிகார மாற்றம் நடந்தது, காந்தி என உருகியவர்கள் யாரும் அவர் கலந்துகொள்ள வேண்டும் என அழைக்கவில்லை
காரணம் அவர் இந்துக்களின் பெரும் வெறுப்பினை சம்பாதித்திருந்தார், தன் மாபெரும் அஹிம்சா உளரல்களால் அபத்தமான பேச்சுக்களால் 5 கோடி இந்துக்கள் பாதிக்கபட்டு சில கோடி இந்துக்கள் சீக்கியர்கள் பலியான அந்த அகோர நிகழ்வினால் அவர் ஒதுக்கபட்டிருந்தார்
அவரின் மிக மிக மோசமான பாகிஸ்தான் அபிமானத்தால் அவரை தேசமே தள்ளி வைத்திருந்தது, அவரை தொட்டால் இந்துக்களின் எதிர்ப்பு எழும் என்று அவரை ஒதுக்கி வைத்தார்கள்
நேரு நாத்திகர், ஐரோப்பிய மோகம் கொண்ட நாத்திகர், தன் பெயரை சர் பாண்டிஸ் நேருஸ் பேட்டன் என அவர் மாற்றமட்டும் தான் செய்யவில்லை
அப்படிபட்ட நேருவுக்கு இந்துமதம் மேல் வெறுப்பே இருந்தது, அந்நேரம் பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்க ஆதீனங்களுடன் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது
அதனால்தான் செங்கோல் சகிதம் ஆதீனங்களுடன் நின்றார், அந்நேரம் அவர் முகத்தில் தெரியும் அந்த கடுமையேஅந்த சூழலுக்கு சாட்சி
தேசபிதா, காந்தி என இன்றுவரை அழுபவர்களும், காந்தி என பெயர் வைத்து அரசியல் செய்தவர்களும் இந்திய சுதந்திரத்தின் பொன்னான தருணத்தில் காந்தி ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதையும், அவர் ஏன் ஒதுக்கி வைக்கபட்டார் என்பதையும் பேசவே மாட்டார்கள்
நவகாளி உண்ணாவிரதத்தால் அவர் டெல்லி விழாவில் கலந்து கொள்ளவில்லை என ஒரு சாக்குபோக்கு சொன்னாலும் அவரின் உண்ணாவிரதம் செப்டம்பரில்தான் தொடங்கிற்று, ஆகஸ்டில் அவர் அந்த விழாவுக்கு வந்திருக்கலாம்
ஆனால் வரவில்லை அழைக்கபடவுமில்லை ஏன்?
இதெல்லாம் வரலாற்றின் ஒரு பக்கம், இதையெல்லாம் யாராவது சொல்வார்களா என்றால் இல்லை, சொல்லவே மாட்டார்கள்
சொன்னால் அன்றைய சூழலில் காந்தி எவ்வளவு பெரும் அதிருப்திக்கு ஆளாகியிருந்தார் என்பதையும் சொல்லவேண்டி இருக்கும் என்பதால் கவனமாக மறைப்பார்கள்
இந்திய சுதந்திர நாள் அன்று காந்திதான் உரை ஆற்றியிருக்க வேண்டும், அவர்தான் இந்திய சுதந்திரத்தின் முதல் உரையினை பேசி பாராளுமன்றத்தை தொடங்கி வைத்திருக்கவும் வேண்டும்
ஆனால் அவர் செய்தாரா? வரலாற்றில் உண்டா? இல்லை
இன்று ஜனாதிபதி ஏன் பாராளுமன்றத்தை திறக்கவில்லை என்பவர்கள் அன்று காந்திக்கு அந்த முதல் விழாவில் காங்கிரஸ் என்ன மரியாதை செய்தது? அவரை அழைக்கவாவது செய்ததா, எனக் கேட்டால் வாயே திறக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment