'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்
தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'
தன் அன்னையின் அன்பிற்கும் அவளின் நேர்மையான வாக்கிற்கும் கட்டுப்பட்டவன் சொல்லட்டும் ஆணென்று
தன் மனையாளைத் தவிர்த்து ஏனைய பெண்களைக் காமக் கண்கொண்டு நோக்காதவன் சொல்லட்டும் ஆணென்று
சாலையோரம் உன் கண்முன்னே செல்லும் கன்னியின் மனம் பதட்டமடையாமல் உன்னாலான பாதுகாப்பை அவள் உணர்வாளென உள்மனம் சொல்பவன் சொல்லட்டும் ஆணென்றுⒶ︎Ⓥ︎Ⓡ︎
முகம் அறிந்தவள் முதுகின் பின்னே உன் நா வசைபாடாமல் உன் தோழனை எச்சரிக்கும் சகோதரத்துவ இதயம் கொண்டவன் சொல்லட்டும் ஆணென்று
அன்பினால் தாய்போட்ட கவசத்தை தகர்த்து உனக்குத் தீங்கிளைத்தவனை நீயும் தண்டித்தாலே ஆண்மகனென்ற தவறான எண்ணத்தை மனதில் விதைக்காதவன் சொல்லட்டும் ஆணென்று
உடன்பிறந்தாளின் மனதில் தந்தையின் பாதுகாப்பினையும், தாயின் அரவணைப்பினையும், தமையனின் கண்டிப்பையும், இளையவன் என்ற செல்லத்துடனும், சுகதுக்கத்தில் சக தோழனாயும், அவளுக்குக் கிடைத்த இறையருளாயும் வாழ்பவன் சொல்லட்டும் ஆணென்று
கஷ்டத்திலும் கறைபடாது மாசற்ற மனதுடன் தன் மகவினை ஒழுக்க சீலனாய் வளர்த்தெடுக்க வேண்டுமென்ற கர்வம் கொண்ட தாயின் வயிற்றில் உதித்தவன் 'கர்வத்துடன் கர்ச்சிக்கட்டும்' நான் ஆண்மகனென்று
எது ஆண்மை??????
"ஓர் ஆணிடமுள்ள தாய்மையில் இருப்பதே ஆண்மை" அத்தகைய மனம் இல்லாதவர்கள் வெட்கித் தலைகுனியுங்கள்.
No comments:
Post a Comment