Friday, June 16, 2023

போகப்போக தெரியும்.

 அமலாக்க துறை என்பது வானளாவிய அதிகாரம் கொண்ட அமைப்பு. எந்த துறையும் கட்டுப்படுத்த முடியாது.

நிதி, வருவாய், நிர்வாகம், காவல்துறை போன்ற அதிமுக்கிய துறைகளுடன் இணைந்து இயங்கும் ஒரே அமைப்பு.
NIA-விற்கு சமமானது. அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே கூட இல்லை.
*இதன் அதிகாரத்தை குறைக்க இதுவரை 18 வழக்குகள் உச்சநீதிமன்றதில் தொடரப்பட்டு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.*
அத்தனை கேஸையும் போட்டது யாருன்னு நினைக்குறீங்க?
வேற யாரு
ப.சிதம்பரம், 2ஜி, இத்தாலி வட்டாரங்கள் தான். கடைசியா பப்பு தரப்பில் போடப்பட்ட ஒரு கேஸ் நிலுவையில் இருக்கு.
காவல்துறையும் விசாரணை செய்யும், அமலாக்க துறையும் விசாரணை செய்யும். ஆனால் இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
காவல்துறையிடம் ஒரு குற்றவாளி கொடுத்த விசாரணை அறிக்கையை எப்போது, எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.
"மன நிலை சரியில்லாமல் சொன்னேன், அழுத்தம் காரணமாக சொன்னேன்" போன்ற சால்ஜாப்பு காரணங்களால் திரும்ப பெற முடியும்.
ஆனால் ED விசாரணை அறிக்கை அப்படி அல்ல, ஒரு முறை வாக்குமூலம் சொன்னால் சொன்னதுதான். யோசிக்க கூட நேரம் இருக்காது. பொய் சொன்னாலும் கிடுக்கி பிடி கேள்விகளால் சிக்க வைத்து விடுவார்கள்.
அவர்களால் பெற முடியாத தரவுகள், தகவல்கள் என்பதே இல்லை.
ஒரு நிமிடத்தில் ஒருவரின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் எடுக்கும் திறன் அவர்களிடம் உள்ளது.
ஆனானப்பட்ட சிதம்பரத்தையே பிதுக்கி விட்டார்கள். சோனியா அம்மையாருக்கு குளிர் காய்ச்சலே வந்து விட்டது. பப்பு சொல்லவே வேண்டாம்..
இப்போ தெரியுதா நெஞ்சு வலி வந்த காரணம்?
அப்படிப்பட்ட ஒரு வழக்கின் வீரியம் புரியாமல் ஒரு மாநிலத்தின் முதல்வர், அமலாக்க துறை கைது செய்துள்ள ஒரு குற்றவாளியை பார்க்க மருத்துவமனைக்கே நேரில் ஓடுகிறார்.
முதல்வருக்கு என்று சில பொறுப்புகளும், கடமையும் உண்டு.
இந்த நாட்டின் ஒரு பகுதியான மாநிலத்தை ஆளும் பொறுப்பில் இருப்பவர் முதல்வர். அமலாக்கத்துறை என்பது நாட்டின் பொருளாதார குற்றங்களை கட்டுப்படுத்தும் அமைப்பு.
*ஒரு முதல்வர் அரசின் நிர்வாக அமைப்பான அமலாக்க துறை பக்கம் தான் நிற்க வேண்டுமே தவிர, குற்றவாளி பக்கம் அல்ல.*
இது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட கடமை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...