Friday, June 16, 2023

என்னைப் பொறுத்த வரை இது ஒரு டிரெய்லர்தான். அமைச்சரைக் கைது செய்தால் என்ன நடக்கிறது என்று பார்ப்பதுதான் நோக்கம்.

 அமலாக்கத்துறை ரெய்டு அரசியல்காரணங்களுக்காக சிலரிடம் மட்டும்தான் நடக்கிறது என்பது ஊறரிந்த ரகசியம். ஆனாலும், நிறைவடைந்த 25 வழக்குகளில், ஒன்றைத்தவிர மற்ற 24 வழக்குகள் திரூபணமாகி இருக்கின்றன. சுமார் ஒரு லக்ஷம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டு அதில் 70 லக்ஷம் கோடி சொத்துமுடக்கத்தை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. மற்றவை நீதிமன்ற நிலுவையில் உள்ளன. இந்த தகவல்களால் அமலாக்கத்துறை குற்றங்களை உறுதிசெய்த பின்னரே நடவடிக்கைகளை எடுக்கின்றது என்பது தெரிகிறது. பொத்தாம்போக்காக ரெய்டுகள் நடக்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனாலும் 5000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் விசாரணை நிறைவடைந்த வழக்குகள் 25 தான். இது 0.5% தான். மற்றவை நிலுவையில் உள்ளதா அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளதா? கடவுளுக்குத்தான் வெளிச்சம். புள்ளிவிவரங்களை எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம்.

அரசியல் விரோதிகளின் மேல்தான் நடவடிக்கை என்பது மேலோட்டமாக பார்த்தாலே தெரியும். குற்றங்கள் புரிந்த நண்பர்களின் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் ரெய்டுகள் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகிறது. வழக்கு தொடர்ந்த பின் எதிரி நண்பரானால் வழக்கு அரசியல்காரணங்களுக்காக தாமதப்படுத்த்தப்படும். ஆனாலும் வழக்கை கைவிடமுடியாது. நிலுவையில்தான் இருக்கும். இது பதவியில் இருப்பதின் ஆதாயம். தார்மீக அடிப்படையில் அது தவறு என்றாலும் சட்டப்படி அதை நிரூபிக்க முடியாது.
அண்ணா முற்றும் துறந்த முனிவருமல்ல பானுமதி படிதாண்டா பத்தினியுமல்ல என்ற கொள்கையில் வளர்ந்த கட்சிக்கும் இது புரியாதா என்ன? மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, சிபிஐயை மோடி அமித்ஷாவுக்கு எதிராக முடுக்கிவிட்ட சிதம்பரத்துக்கு இது நன்றாக பிரியும். ஆனாலும் சிபிஐ வேறு அமலாக கத்துறை வேறு.
எது எப்படி இருந்தாலும் அமலாக்கத்துறை சந்தேகத்தின் பேரில் மட்டுமோ, ஆட்சியில் இருப்பவர்களின் அழுத்தத்தால் குற்றம் செய்யாதவர்களின் மீது ரெய்டு நடத்தாது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் புலப்படுத்துகின்றன.
ஒரு வேளை VSB பாஜகவில் சேர்நதாலோ அல்லது அப்ரூவராக மாறி ஸடாலின் குடும்பத்தை கைகாட்டினாலோ காட்சிகள் மாறலாம். வழக்கு தாமதப்படுத்தப்படலாம். ஸ்டாலினுக்கு அதனால் அஸ்தியில் ஜூரம்.
VSBயின் அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு அவரின் இந்த சாதுர்யம் நன்றாக புரியும். ஸ்டாலினின் அவசரமான அறிக்கையும், உடனடி மருத்துவமனை விசிட்டும் இந்த பதட்டத்தின் வெளிப்பாடுதான்.
May be an image of text that says 'அமலாக்கத் துறை 96% வழக்குகளில் குற்றம் நிரூபணம்! 16148 OTWNC. 8.99% 6.647 செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் அமலாக்கத் துறை சோதனையை குறிப்பிட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் அமலாக்கத்துறை ரெய்டில் 100 வழக்குகளில் 0.5% தான் நிரூபணமாகிறது என்று பொய் சொல்லியிருக்கிறார். ஆனால் அமலாக்கத் துறை அறிக்கையில் 96% வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளது அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. எனவே இந்த ரெய்டு மூலம் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்படுவது உறுதி என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...