Friday, November 3, 2023

அம்மா ஆட்சியைத் தருவேன் என்பவர்களின் லட்சணம் இது தானா?? சரி!

 இன்றைக்கும்,,,நாளைக்கும் என்மீது

பல அம்புகள் பாயும்??--காரணம்??
எடப்பாடியாரை விமர்சிக்கப் போகிறேன்--
ஆனால்
அ.தி.மு.கவின் மேலிட தலைமைகளையும்--
அ.தி.மு.க அடிப்படைத் தொண்டர்களையும் எந்த சலனத்துக்கும் உட் படுத்தாது.--காரணம்??
மேலிடக் கரை வேட்டிகள்??
பதவி,,,பணத்துக்காக அனைத்தையும் துறந்துவிட்டு
சிரித்துக் கொண்டே உள்ளுக்குள் கருவறுப்பார்கள்
அம்மாவைச் செய்தது போலவே??
அடிப்படைத் தொண்டர்கள்--??
பாவம்,,அப்பிராணிகள்
என் தலைவனோட கட்சி நான் சாகும்வரை தி.மு.கவை எதிர்ப்பேன்!!--
இது தான் இவர்களது நிலைப்பாடு!!
எந்த ஆதாயமும் எதிர்பார்க்காத இவர்கள் தான் அக்கட்சிக்கான ஓட்டு வங்கி
இடை பட்ட---
குறிப்பாக ஊடகங்களில் உலவும் அக்கட்சிக்காரர்கள் சிலருக்கு,,,,
சினத்தைத் தரலாம்
அதற்காக சிலவற்றை விமர்சிக்காமலும்,,,விளக்காமலும் இருக்க முடியாது.
...
கொள்ளைக் குற்றவாளி சசிகலா...
420 திஹார் கரன்...
சமாதான கருப்பு கள்ளப் புறா
ஐயா பன்னீர்செல்வம்...
ஆகியோர் களுக்கு எதிராக வும்...
இடைப்பாடி பழனிச்சாமி!!
அவர்களை ஆதரித்தும்...
இவரது ஆட்சியைப் பாராட்டி நானே பலமுறை பதிவிட்டிருந்தாலும்--
அண்மையில் இவர் செய்த செயல் ஒன்று
உண்மையில்,,, நடு நிலை மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை!
கோவை குண்டு வெடிப்புக் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற இவரது விபரீதத் தீர்மானம்??
ராஜீவைக் கொன்ற குற்றவாளிகளை...
பாசிச இயக்கமான விடுதலைப் புலிகளை கடைசிவரை மன்னிக்கத் தயாராகவே இல்லை அம்மா அவர்கள் .
இத்தனைக்கும்,,,,பிரபாகரன் மறைவுக்குப் பின்னர் ஆங்கே பெரியதொரு போர் நடக்காததும்--
அவர்கள் சிறையில் இருந்த காலம் அதிகமானது என்றாலும்--
கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் நியாயத்துக்காகக் கடைசிவரை எதிர்ப்பு காட்டினார் அம்மா...
2016 இல் ஏதோ பெயரளவுக்கு,,,,அரசியல் ரீதியாக ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்தார் என்பதைத் தவிர!
ஆனால்,,,,
இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளோ--
1990 களின் இறுதியில் கோவையில் நாசத்தை ஏற்படுத்தியதோடு--
போன வருடம் கூட,,,,காரில் சிலிண்டர் வெடிப்பு என்ற பெயரில் பெரியதொரு நாசத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த பயங்கரவாத கும்பல்.
பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்த மறு கணமே--
கோவை குண்டு வெடிப்புக் குற்றவாளிகளை ரிலீஸ் செய்யவேண்டும் என்று குரல் கொடுப்பது---
ஒரு தலைமையின் உறுதிக்கும்-- சம நிலை காப்பதற்கும் அழகா??
இவர் ஆட்சி செய்தபோது இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தாலும்--
ஏதோ அரசியல் என்று விட்டிருக்கலாம்!
ஏற்கனவே,,,,
1999இல் சிறுபான்மையினரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார் ஜெ!
அதன் பின் அவர்,,,,பி.ஜே.பியுடன் கூட்டணியே வைக்கவில்லை
ஆனால்----
2017 இல் மோடியின் சொல் கேட்டு நடந்தது--
2019 இல் பி.ஜே.பியுடன் இவர்கள் கூட்டு வைத்ததன் காரணம்??
அம்மா ஆட்சியைத் தருவேன் என்பவர்களின் லட்சணம் இது தானா??
சரி!
இதை விட,, நமக்கு எடப்பாடியார் மேல் வருத்தம் உண்டாகக் காரணமான விஷயம்??
நாளைக்குப் பார்க்கலாமா..???
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...